கால அவகாசம் கொடுத்தும் அரசு கணக்கெடுக்கவில்லை! நாடு இருளில் சூழும் அபாயம்?

அரசாங்கம் எவ்வாறான அழுத்தங்களை கொடுத்தாலும் இன்று (செவ்வாய்க்கிழமை) (29) பகல் 12 மணியுடன் ஒட்டுமொத்த மின் சேவையாளர்களும் வீதிக்கு இறங்குவர் என இலங்கை மின் சேவையாளர் சங்க பிரதான செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

கால அவகாசம் கொடுத்தும் அரசாங்கம் தமது கோரிக்கைகளை கண்டுகொள்ளாதிருப்பதால் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் அமைச்சரவை திருத்தத்தில் மின்சக்தி அமைச்சர் மாற்றப்படும் நிலை ஏற்படலாம் எனவும் அதற்கு முன்னர் தமக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள ஜனநாயக வழியில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதைவிட வேறு வழி தெரியவில்லை என ரஞ்சன் ஜயலால் குறப்பிட்டுள்ளார்.

Published by

Leave a comment