-SHM
வெள்ளிக்கிழமைதான் உலகமும் அழியும். இதே போல்தான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இலங்கை முஸ்லிம்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கவேண்டிய ஓர் நிலையம் இப்போது ஏற்பட்டுள்ளது. அரச பாதுகாப்புக்கள் இருந்தும் நீதி, சுதந்திரம் கடைப்பிடிக்கப்பட்டும் முஸ்லிம்கள் மீதான ஓர் அடக்குமுறையை சிங்கள இனவாதம் தூண்டிவருவது கண்டிக்கத்தக்கதே!
தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயலும் ஒர் வெள்ளிக்கிழமைதான் சிங்கள மதவாதிகளால் எதிர்த்து உடைக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இவ்விடயத்திற்கு தீர்வு காண்பதற்குள் தெஹிவளை பள்ளிவாயல் மற்றும் மதரஸாவிற்கு அச்சுறுத்தல் விடப்பட்டிருக்கிறது. இதுவும் ஓர் வெள்ளிக்கிழமையே இடம் பெற்றது. இவற்றைப் பாரக்கும்போது இவர்களுக்குப் பின்னால் ஓர் சதிக்கும்பல் இருப்பதாக என்னத் தோன்றுகிறது. முஸ்லிம்களுக்குள் ஒற்றுமையில்லாத பலத்தை பேரினவாதிகள் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் இறங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தாருர் ரஹ்மான் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையில் மஸ்ஜித்தாகவும், ஆரம்ப பாடசாலையாகவும் 2002 ஆண்டு தொடக்கம் பதியப் பட்டுள்ளது.அதேபோன்று வக்பு சபையில் மஸ்ஜித்தாகவும் 1999 ஆம் ஆண்டு மஸ்ஜித்தாக பதிவு செய்யப்பட்டு அவற்றுக்கான ஆதாரங்கள் முஸ்லிம் தரப்பில் இருந்தபோதும் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையில் மஸ்ஜித்தாகவும், ஆரம்ப பாடசாலையாகவும் 2002 ஆண்டு பதிவு செய்யப்பட்டமைக்கான பதிவுகள் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையின் ஆவணங்களில் இல்லை என்று மாநகர நிர்வாக தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
எனினும் முழுதான ஓர் தீர்மானம் தெஹிவளை மத்ரஸா விடயத்தில் எடுக்கப்படவில்லை என்பது உண்மை!
Leave a comment