கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முதலாவது மகளிர் கிளை நேற்று சனிக்கிழமை காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நிதியமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் திறந்துவைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண மகளிர் பிரிவு அமைப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா தலைமயில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.எஸ்.பி.அப்துல் மஜீத் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது அமைச்சர் ஹக்கீம், மற்றும் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஜீத் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு உரையாற்றிய அகில இலங்கை சமாதான நீதவானும் இணையத்தின் உபதலைவருமான கமலதாஸ்,
“நீதிமைச்சர் யுத்தத்தாலும் அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தவித்துக் கொண்டிருக்கின்றவர்களுக்கான பொறிமுறைகளை அமைத்து தமது பிள்ளைகளை, கணவன்மார்களைப் பிரிந்து வாழுகின்ற பெண்களின் மனங்களில் சமாதானத்தினை ஏற்படுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
“அதேநேரம், நீதியமைச்சரின் காலத்தில் முக்கியமான மாற்றங்களை செய்யக்கூடியதாக இருக்கும். யுத்தம் மற்றும் வேறு அனர்த்தங்கலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமாதான நீதவான்களின் தேவை அதிகமாக ஏற்பட்டது. அமைச்சர் பதவியேற்றதும் நூற்றுக்கணக்கான சமாதான நீதவான்களுக்கு பதவிகளை வழங்கியிருக்கிறார்.
இதன் மூலம் கிராமங்களிலும் வேறு இடங்களிலும் சமாதான நீதவான்களின் சேவைகளை மக்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அத்துடன் இன்னமும் பல கிராமங்களில் சமாதான நீதவான்களின் தேவைகள் உள்ளன அவற்றுக்கும் நீதி அமைச்சர் ஆவன செய்ய வேண்டும்” எனவும் அவர் கோரினார்.
-Tamilmirror
![3(1221)[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/3122111.jpg?w=300&h=225)
Leave a comment