-SHM
கருத்தை கருத்துக்களால் வெல்லமுடியாதவர்கள், எமது முஸ்லிம் சமூகம் பற்றிய அக்கரையற்ற முதுகெலும்பு அற்றவர்கள், போன்றோரின் காடைத்தனம் இன்றுமட்டுமல்ல காத்தான்குடியின் அரசியல் வரலாற்றில் ஒவ்வொருமுறையும் அரங்கேறி வருவது சுட்டிக்காட்டத்தக்கது. வீடு உடைப்பு, மிரட்டல்கள், கடையெறிப்புக்கள், தர்மஅடி… இப்படியே சுடுகாடாக ஒவ்வொரு தேர்தலின்போதும் அரங்கேறிவருவது கண்டிக்கத்தக்கதே! எமது முஸ்லிம் சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய காத்தான்குடி சமூகம், சில காடையர்களால் அவ்வப்போது மன உளைச்சல்களையும் கெட்ட பெயர்களையும் தாங்கவேண்டிய சூழ்நிலைக்கு காத்தான்குடி மக்கள் உள்ளவாங்கப்படுவது வேதனைக்குரியது. இந்தவகையில்
இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய காத்தான்குடி அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிகப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இக்கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அலுவலக கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது.![542004_450066438355021_100000550058077_1667837_1566340239_n[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/542004_450066438355021_100000550058077_1667837_1566340239_n1.jpg?w=300&h=225)
புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைக்கப்பட்டிருந்த இவ் அலுவலகம் இன்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கபடவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கறுப்புக் கொடிகள் காட்டுவது, பள்ளிவாயல்களைவிட்டு வெளியேற்றுவது இதுவெல்லாம் ஓர் முஸ்லிமுக்கும் முஸ்லீம் சமூகத்துக்கும் ஓர் முன்மாதிரியல்ல என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும். இவ்வாறான காடைத்தனங்களைவிட்டும் தவிர்ந்து கருத்துக்களை முன்வைத்து மக்களை ஒன்றினைத்து பாடுபடவேண்டிய இத்தருணத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நிச்சயமாக எதிரிகளுக்கு ஓர் வரப்பிரதாசமாக அமையும் என்பது திண்ணமே.எமது சமூகத்துக்குள் ஏற்படுகின்ற இவ்வாறான பிளவுகள் எதிரியின் வாயில் வெல்லம் கிடைத்திருப்பது போன்றதாகும் என்பதை இவர்கள் சிந்திப்பார்களா?
Leave a comment