ஜனாதிபதி அளித்த சுதந்திரத்தை சரத்பொன்சேகா துஷ்பிரயோகம் செய்கிறார்

வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையிடுவதாகவும் படை முகாம்கள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் சமீபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அளித்த மன்னிப்பின் கீழ் சிறையில் இருந்து விடுதலை பெற்றிருக்கும் சரத் பொன்சேகா ஒரு தமிழ் தினசரிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

பதில் ஊடக, தகவல் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில், நேற்று நடத்திய ஊடகவியலாளர் மகாநா ட்டில், ஜனாதிபதி அவர்கள் நல்லெண்ணத்துடன் சரத் பொன்சேகாவை சிறையில் இருந்து விடுவித்துள்ள போதிலும், சரத் பொன்சேகா மீண்டும் வடக்கில் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்று சொன்னார்.

வட பகுதியில் தோன்றியிருக்கும் அமைதிக்கு தீங்கிழைக்கக் கூடிய வகையில் சரத் பொன்சேகா கருத்துக்களைத் தெரிவிப்பதன் மூலம் மீண்டும் வெளி நாட்டுத் தரப்பினர் இலங்கையின் உள்ளூர் பிரச்சினைகளில் தலையீடு செய்ய வேண்டும் என்ற கருத்தையே மறைமுகமாக வெளியிட்டிருக்கிறார் என்றும் கண்டனம் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒரு விபத்தினால் காயம் அடைந்த பின்னர் அங்கு 4 மாத காலம் சிகிச்சை பெற்று இப்போது குணமாகி இருக்கும் வெகு ஜன ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல வியாழக்கி ழமை இரவு நாடு திரும்பினார்.

கொழும்பில் உள்ள அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் அமைச்சர் கெஹ லிய ரம்புக்வெல்லவும் பதில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வும் செய்தி நிருபர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.

சரத் பொன்சேகா பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளி த்த திரு. கெஹலிய ரம்புக்வெல, ஜனாதிபதி அவர்கள் அளித்த மன்னிப் பின் மூலம் சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கும் சரத் பொன் சேகா தன்னுடைய உண்மை நிலைப்பாட்டை மறந்து விட்டு ஜனாதிபதி அவர்கள் அளித்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்கி றார் என்று கண்டனம் தெரிவித்தார்.

உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கு சரத் பொன்சேகா வெளி நாட்டில் உள்ளவர்களை தலையிடுமாறு அழைத்தது தவறான செயல் என் றும், இப்போது அவர் இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்தவர்களில் கைப் பாவையாக மாறிவிட்டாரோ என்ற சந்தேகம் எம்மத்தியில் எழுந்துள்ளது என்று கூறினார்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதி ராக எடுக்கப்பட்ட முடிவு ஒரு தோல்வி அல்ல என்றும், ராஜதந்திர மட்ட த்தில் இவ்விதம் தோல்விகள், வெற்றிகள் மாறி மாறி வரும் என்றும் சொன் னார்.

ஜெனீவா தீர்மானம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ‘நான் அத ற்கு ஏற்புடைய ஒரு நல்ல முடிவை எடுப்பேன்’ என்று தெரிவித்திருக்கும் கருத்தை அமைச்சரவையில் உள்ள சகல அங்கத்தவர்களும் இந்நாட்டு மக்களும் நம்புகின்றார்கள்.

ஜனாதிபதி அவர்கள் செய்த சாதனையை நாம் மறக்க முடியாது. ஒரு தடவை யல்ல, இரண்டு தடவையல்ல, மூன்று தடவை ஜனாதிபதி அவர்களே இந்த நாட்டை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றிய மாவீரர் என் பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் கெஹ லிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கருணையினால் இன்று சுதந்திரம் பெற்றிருக்கும் சரத் பொன் சேகா, இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து சர்வ தேச நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித் திருக்கும் கருத்து பற்றி தான் அபிப்பிராயம் தெரிவிப்பதாயின், இலங்கை யில் பேச்சு சுதந்திரம் இருக்கிறது. எவருக்கும் எதையும் பொறுப்பற்ற முறை யில் சொல்லலாம். ஆனால் இன்று சாதாரண மனிதனாக இருக்கும் சரத் பொன்சேகா சொல்வதை எவரும் பொருட்படுத்த மாட்டார்கள் என்றும் திரு. கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகவியலாளர்களுக்கு கூறினார்.

சரத் பொன்சேகா இந்த தமிழ் தினசரிக்கு அளித்த பேட்டியில், வடக்கின் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு இருப்பதை தாம் ஏற்றுக் கொள் வதாக தெரிவித்திருக்கிறார். வடக்கு கிழக்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்ப டாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்குள்ள படை முகாம்கள் படி ப்படியாக அகற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு :- சந்தேகத் தின் பேரில் கைதான இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர் கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். நான் இராணுவத் தில் இருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டுக்குள் மீள்குடி யேற்றத்தை எப்படி முடிப்பது என்பது பற்றியும் எந்தெந்த இடங்களில் படை முகாம்களை அகற்ற வேண்டும் என்பது பற்றியும் தமிழ் மக்களை எவ்வித தொல்லைகளும் இன்றி எப்படி குடியேற்றுவது என்பது தொடர்பி லும் திட்டங்களை வகுத்திருந்தேன்.

அந்தத் திட்டங்களை அவர்கள் அப்போது வெறுத்தனர். ஆனால் 2012ல் அதாவது இன்று வரையில் இவர்களால் ஒன்றும்கூட செய்ய முடியாமல் போயுள்ளது.

வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டியது கட்டாயமாகும். இரா ணுவ முகாம்களால் மக்களுக்கு சிரமம் ஏற்படுமாயின் உண்மையில் அது பிரச்சினைதான். அதே போல் கிட்டத்தட்ட 12 ஆயிரம் முன்னாள் போரா ளிகளுக்கு நாம் புனர்வாழ்வளித்திருக்கிறோம்.

அவர்கள் சரியான முறையில் புனர்வாழ்வளிக்கப்பட்டார்களா? அவர்கள் மன உளை ச்சலுக்கு ஆளாகியுள்ளார்களா என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. மீண் டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்த பின்னர் இரா ணுவ முகாம்களை படிப்படியாக அகற்றலாம். வடக்கில் சிவில் நிர்வாகத் தில் இராணுவத்தின் தலையீடு இருப்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள் கிறேன். சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் இருக்கக்கூடாது. அது முழு மையாக நிறுத்தப்பட வேண்டும். இராணுவம் இராணுவத்தின் வேலைகளை மாத்திரம் தான் செய்ய வேண்டும்.

கடந்த மூன்று வருடங்களில் இராணுவத்தை இவர்கள் சிவில் நிர்வாகத்தில் இருந்து விலக்கியிருக்கலாம். இப்போது இவர்களால் போடப்பட்டிருக்கும் அதிகாரிகள் கூட தகுதிவாய்ந்தவர்கள் அல்ல. அரசியல் அடிவருடிகளைத் தான் இவர்கள் நியமித்துள்ளனர். யாழ்ப்பாணத்தைப் பாருங்கள். இதுதான் நிலைமை. கொள்கை இல்லாமல் போனால் இப்படித்தான் இருக்கும் என்று இந்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

-thinakaran

Published by

Leave a comment