எகிப்து ஜனாதிபதித் தேர்தல்: மொர்சி முன்னிலையில்

-MMS

எகிப்திய ஜனாதிபதித் தேர்தலின் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் 26 வீதமான வாக்குகளைப்பெற்று முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்  முகம்மட் மொர்சி (இடம்) முன்னிலை வகிக்கிறார். 23 வீதமான வாக்குகளைப் பெற்ற முன்னால் எகிப்தின் பிரதமர் அகமட் சபிக் (வலம்) இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இன்னும் சில மணி நேரங்களில் இறுதி முடிவு வெளியாகவுள்ளதாக எகிப்தின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத்தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஒருவரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெறாத பட்சத்தில் இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதில் முதல் சுற்றில் முதல் இரு இடங்களையும் பெற்ற வேட்பாளர்கள் எதிர்வரும் ஜூன் 16, 17 ஆம் திகதிகளில் இரண்டாவது சுற்றில் போட்டியிடுவர்.

Published by

Leave a comment