அம்பாறை மாவட்ட பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் விடயத்தில் அரசு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பொதுநிர்வாக அமைச்சு பட்டதாரிகளை பயிலுனர்களாக சேர்த்துக் கொள்ளும் பொருட்டு பத்திரிகையில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
இதற்கமைய விண்ணப்பித்த பட்டதாரிகளில், அரசியல்வாதிகளினால் வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலில் குறிக்கப்பட்ட பட்டதாரிகளை மட்டும் நேர்முகப் பரீட்சைக்கு அழைத்து ஏனையவர்களை அழைக்காது விட்டதன் மூலம் அரசு பட்டதாரிகளுக்கு அநீதி இழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பட்டங்களை முடித்து வெளியேறிய ஆண்டு அடிப்படையிலும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவில்லை.
பட்டதரிகளுக்கான நேர்முகப் பீட்சை எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் அம்பாறை கச்சேரியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்றை அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் சங்கம் நாளை சனிக்கிழமை சாய்ந்தமருது வரவேற்பு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடாத்தவுள்ளது.
-adaderana

Leave a comment