சுப்ரீம் சற் நிறுவனத்துடன் முதலீட்டுச் சபை ஒப்பந்தம்
சுப்ரீம் சற் பிறைவற் லிமிட்டட் (Supreme Sat (PVT) LTD) ழிஹிளி) முதலீட்டுச் சபையுடன் செய்மதி தொழில் நுட்பம் சம்பந்தமான ஒப்பந்தம் ஒன்றை நேற்று செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி அமைக்கப்படவுள்ள செய்மதி நிறுவனம் இலங்கையின் முதலாவது செய்மதி கம்பனியாக அமையும். 20 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இக் கம்பனி சீனாவின் அரச உரிமையுள்ள சீனா கிறேற் வோல் இன்டர்ஸ்ட்றி கோர்ப்பறேசன் (China Great Wall Industry Corporation) (CGWIC) (CGWIC) உடன் பிரத்தியேக பங்குதாரர் ஒப்பந்தம் ஒன்றையும் செய்துள்ளது.
இது செய்மதிகளின் வடிவமைப்பு, தயாரிப்பு, செய்மதிகளை ஏவுதல், சந்தை வாய்ப்புக்களைத் தேடுதல் போன்றவற்றை மேற்கொள்ளும் ஒரு நிறுவனமாகும். இது 1980 இல் உருவாக்கப்பட்டது. சீன அரசினால் இது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம், இதற்கு செய்மதிகளை வழங்கலும் வர்த்தக சேவைகளை மேற்கொள்ளவும், சர்வதேச விண் ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சர்வதேச வாடிக்கையாளர்களுடன் ஒன்பது ஒப்பந்தங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
இக் கம்பனி உள்ளூரிலும் பல செய்மதிகளை நெறிப்படுத்தியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் அமெரிக்காவையும் மிஞ்சியதாக இச் செய்மதியின் செயற்பாடுகள் அமைந்தன. சி ஜி. டபிள்யூ. ஐ. சி. (CGWIC) சீனாவின் வான்துறை கைத்தொழிலின் சர்வதேச அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.
வான்துறை பொருட்கள் சேவைகளுக்காக சி. ஜி. டபிள்யூ. ஐ. சி. (CGWIC) சிறப்பான சேவை முறையை ஒழுங்குபடுத்தியுள்ளது.
வர்த்தகமய நெறிப்பாட்டுச் சேவைகளுக்கு முழுமையான தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இச் சேவைகள் பலவகையிலும் அமைகின்றன. செய்மதி ஏற்றுமதி, செய்மதி கட்டுப்பாட்டு நிலைய நிர்மாணம், செய்மதி பயன்பாடு, திட்ட நிதி வழங்குதல், திட்ட காப்புறுதி, தொழில்நுட்ப பயிற்சி இதில் அடங்கும். “பிரகாசிக்கும் கிழக்கின் எழுச்சி” எனப்படும் டொங்ஃபங் ஹாங் (DONG FANG HONG) என்றும் சுப்ரீம் சற் செய்மதி அழைக்கப்படுகிறது.
சகல வகையான தொலை தொடர்புச் சேவைகளை சுப்பிaம் சற் வழங்கும். இதன் மூலம் ஈ-கவர்மன்ற் மற்றும் ஈ- லேர்னிங் போன்ற வசதிகளும் இதனால் கிட்டும். யுத்தத்துக்குப் பின்னரான இலங்கை பொருளாதாரத்தில் இது முதலீட்டு நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
அரசியல் ஸ்தீரப்பாடும், திருப்திகரமான முதலீட்டு சூழலும் ஆதரித்துள்ளன. எம்மைப் போன்ற தொழில் வல்லுனர்கள் விண்ணை அடைய சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு அன் நிறுவனத்தின் (SAT (PVT) LTD) தலைவர் ஆர். எம். மணிவண்ணன் தெரிவித்து ள்ளார். நாம் இதனை நெறிப்படுத்துவதற்காக அங்கீகாரம் பெற தொலைத் தொடர்பு சீராக்கல் ஆணைக்குழுவுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுகிறோம்.
முதலீட்டுச் சபைக்கும் நன்றி தெரிவிக்கின்றோம் என்றும் தலைவர் மணிவண்ணன் தெரிவித்தார்.
பிரத்தியேகப் பங்குதாரராக Supreme Sat உடன் இருப்பது எமக்கு மகிழ்ச்சி தருவதாகும்.
இலங்கையின் வான் ஆசை யதார்த்தமாக்க இந்த பங்குதாரர் துணை செய்யும்.
இலங்கையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இது துணை செய்யுமென்று CGWIC இன் பிரதி பணிப்பாளர் முகாமையாளர் WANG ZHONGMIN தெரிவித்தார்.
-Thinakaran
Leave a comment