மைலோ கிண்ண வலைப்பந்தாட்டம்; வடக்கு, கிழக்கு பாடசாலைகள் பங்கேற்பு

இறுதி ஆட்டம் ஜுலை 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் பொலன்னறுவையில் நடைபெறும்.

இலங்கை பாடசாலை வலைப்பந்தாட்ட சங்கம், நெஸ்லே லங்கா நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் அனுசரணை யுடன் ஏற்பாடு செய்யும் ‘மைலோ’ கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர் 21வது முறையாக இம்மாதம் நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியாக இடம்பெறும் போட்டிகளில் 350 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 1000க்கும் மேலான வீராங்கனைகள் பங்கு கொள்கின்றனர்.

இம்மாதம் 26 தொடக்கம் ஜூன் 24 வரை 16 இடங்களில் போட்டிகள், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, ஹேமாகம, காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் நடைபெறும்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த 15 பாட சாலை அணிகள் இம் முறை போட்டிகளில் கலந்து கொள்கின்றமை விஷேட அம்சமாகும்.

“ஏ” மற்றும் ‘பீ’ எனும் இரு பிரிவுகளாக போட்டிகள் இடம்பெறும். இதில் ‘ஏ’ பிரிவில் 811 வீராங்கனைகளும் பீ பிரிவில் 85 வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர். தொடரின் இறுதி ஆட்டம் ஜுலை 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் பொலன்ன றுவையில் நடைபெறும்.

Published by

Leave a comment