கிழக்கு மாகாண தமிழ் மொழி தினப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் 158 புள்ளிகளை பெற்று முதலிடத்தினை பெற்றள்ளது.
அத்துடன் 136 புள்ளிகளை பெற்று திருகோணமலை மாவட்டம் இரண்டாமிடத்தையும் 130 புள்ளிகளை பெற்று கல்முனை கல்வி மாவட்டம் மூன்றாமிடத்தையம் பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண தமிழ் மொழி தினப்போட்டி 20, 21 திகதிகளில் திருகோணமலை உவர் மலை விவேகானந்தர் கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் கிழக்கு மாகாணத்தின் மூன்று கல்வி மாவட்டங்களில் இருந்தும் 13 கல்வி வலயங்களுக்குட்பட்ட 80 பாடசாலைகளின் போட்டியாளர்கள் பங்கு பற்றினர்.
போட்டியில் பங்கு பற்றிய 13 வலயங்களுக்குள் 91 புள்ளிகளை பெற்று திருகோணமலை வலயம் முதலாமிடத்தையும், 87 புள்ளிகளை பெற்று மட்டக்களப்பு வலயம் இரண்டாமிடத்தினையும் 67 புள்ளிகளை பெற்று கல்முனை கல்வி வலயம் மூன்றாம் இடத்தினையம் பெற்றுள்ளன.
மாகாண மட்ட போட்டியில் பங்கு பற்றிய 80 பாடசாலைகளுக்குள் திருகோணமலை ஸ்ரீ சன்முகா இந்து மகளீர் கல்லூரி 38 புள்ளிகளுடன் முதலாமிடத்தினையும் கல்முனை கார்மேல் பற்றிமக் கல்லூரி இரண்டாமிடத்தினையும் மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளது.
-Tamilmirror
Leave a comment