போர் குற்றம் தொடர்பிலான எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் இலங்கை கட்டாயம் முகங்கொடுக்க வேண்டும் என சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
விடுதலையாகிய ஒரு நாளில் பீபீசி செய்திச் சேவைக்கு அவர் அளித்த செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சில தலைவர்கள் போர் குற்றம் புரிந்தது போல் தங்களுடைய முகங்களை மறைத்துக் கொள்வதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு யுத்தத்திற்கு தலைமை தாங்கியவர் என்ற அடிப்படையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.
ஆனாலும் இலங்கையின் சில தலைவர்களது நடத்தை சர்வதேசத்தில் எம்மை குற்றவாளிகள் போன்று அடையாளம் காட்டுவதாக சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இறுதிக் கட்ட போரில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு அரசியல்வாதிகள் பொறுப்பற்றவர்கள் என்பதால் முன்வர அவர்கள் அஞ்சுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் அரசியல் கலாசாரத்திற்கு முடிவுகட்ட அரசியலுக்கு வர தனக்கு தேவை இருப்பதாகத் தெரிவித்த சரத் பொன்சேகா, எனினும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது குறித்து தனக்கு இன்னும் தகவல் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment