-MMS
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தியமைச்சினால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைகளை பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எஸ்.லியனகே நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டார்.
இதன்போது பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி வேலைகளை பார்வையிட்ட பணிப்பாளர் லியனகே காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள ஈச்ச மரங்களையும் பார்வையிட்டார்.
இவ்விஜயத்தின்போது, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் பொருளாதார அபிவிருத்;தி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்
Leave a comment