மனித சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் மதிப்பளிக்கும் ஓர் உன்னத தலைவராக விளங்கிவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ கடந்த காலத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்தார். ஜே.ஆர். ஜெயவர்தன ஜனாதிபதியாக இருந்த காலகட்டத் தில் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்றைய அரசாங் கத்தினால் மனிதாபிமானமற்ற முறையில் பல்வேறு துன்பங்களுக்கு இலக்கானார்.
தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக மஹிந்த ராஜபக்ஷ அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் சிறை வைக்கப்பட்டார். ஒரு சிறிய அறையில் அவர் தனியாக தடுத்து வைக்கப்பட்டிருந் தார். அப்போது அவரது அறைக்கு குளிர்சாதன வசதிகளோ, மின் விசிறிகளோ, சொகுசான கட்டிலோ, ஸ்னானம் செய்வதற்கு சுடுநீர் வசதியோ, இரவில் நிம்மதியாக நித்திரை கொள்வதற்கு நுளம்பு வலைகளோ கொடுக்கப்படவில்லை.
ஒரு கிழிந்த பாய் மாத்திரமே தரையில் படுப்பதற்கு கொடுக்கப்பட்டது. அவருக்கு தலையணைகூட இருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ சிறையில் இருந்த காலகட்டத்தில் அவரது மனைவி ஷிரந்தி அம்மை யார் கர்ப்பமாக இருந்தார். தான் படும் இந்த வேதனையை மனை வியோ அல்லது தனது தாயாரோ பார்க்கக் கூடாது என்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்விருவரையும் சிறையில் வந்து தன்னைப் பார்க்கக் கூடாது என்று கண்டிப்பான நிபந்தனையையும் விதித்திருந்தார்.
அவர் இருந்த அறையில் காற்றோட்டம் இருக்கவில்லை. வியர்வையில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு மூட்டைப் பூச்சிகளின் தொல்லையும் நுளம்புத் தொல்லையும் சிறை வாழ்க்கையை நரக வாழ்க்கையாக மாற்றி இருந்தது.
சிறையில் தன்னந் தனியாக துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்த தன்னுடைய கணவருக்கு ஷிரந்தி அம்மையார் சுவையாக சமை த்து அனுப்பி வைத்த உணவுப் பார்சலைக்கூட அவருக்கு சாப் பிட முடியாத அளவுக்கு சிறை உத்தியோகத்தர்கள் அதில் முள் ளுக் கரண்டியினால் குத்திக் குத்திப் பார்த்து அந்த உணவை சாப்பிட முடியாத அளவுக்கு செய்துவிடும் கொடுமைக்காரர்களாக வும் இருந்தார்கள்.
அன்றைய அரசாங்கத்தின் கட்டளைப் படியே அவர்கள் இவ்விதம் எதிர்க் கட்சியில் ஓர் உதய சூரியனைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர் களின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் அளவு க்கு கொடுமைக்காரர்களாக மாறி இருந்தார்கள்.
அன்று திரு மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் வைத்து கொடுமைப் படுத்தியதைப் போன்று நக்ஸலைட் என்ற போலிக் குற்றச்சாட்டை சுமத்தி திரு விஜயகுமாரதுங்க அவர்களையும் அன்றைய ஜே. ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கம் வெளிச்சமற்ற இருளில் மூழ்கி இருந்த ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்தது. மேலும் ஒரு மாத காலம் விஜயகுமாரதுங்க அந்த அறையில் அடைத்து வைக் கப்பட்டிருந்தால் அவர் தனது கண் பார்வையை முற்றாக இழந்தி ருப்பார் என்று கண் வைத்தியர்கள் அன்று வேதனை தெரிவித்தி ருந்ததும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
சிறையில் வைக்கப்பட்டிருந்த தனது மகனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று பிடிவாதமாக தனது மற்றப் பிள்ளைகளுடன் சிறைச்சாலைக்கு வந்திருந்த திரு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தாயார் அவரைச் சிறைக் கூண்டில் பார்த்து இவர் தானா எனது மகன் என்று அடையாளம் காணமுடியாத அளவுக்கு மெலிந்து இருந்ததைக் கண்டு வேதனை தாங்க முடியாமல் வெலிக்கடைச் சிறைச்சாலையில் திடீர் என்று நோய்வாய்ப்பட்டார். பின்னர் தாயார் கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டபோது தாயாரைச் சென்று பார்ப்பதற்கு அன்றைய அர சாங்கம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.
இறுதியில் அனுமதி பெற்று சிறை உத்தியோகத்தர்களின் காவலுடன் ஆஸ்பத்திரிக்கு அவர் சென்றபோது தாயார் தனது இறுதி மூச்சை விட்டிருந்தார். பின்னர் மீண்டும் சிறையில் அவர் அடைக்கப் பட்டார்.
தாயாரின் இறுதிக் கிரியைகளில் ஒரு சுதந்திர மனிதனாக கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக திரு மஹிந்த ராஜபக்ஷ வின் சகோதரர்கள் நீதிமன்றத்துக்கு பிணை மனுச் செய்திருந்தனர். இறுதியில் பிணை மனுக் கிடைத்ததனால் கைவிலங்கின்றி ஒரு சுதந்திர மனிதனாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தாயாரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டார்.
சிறையில் உள்ள ஒருவர் அனுபவிக்கும் வேதனைகளை நன்கு உணர்ந் திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது ஆட்சி யின் கீழ் சிறைக் கைதிகளை மனிதாபிமானத்துடன் கெளரவமாக நடத்தும் நற்பண்பை அறிமுகம் செய்து வைத்தார்.
அதனால் பிற்காலத்தில் சிறைத் தண்டனை அனுபவித்த பலர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள சகல வசதிகளுடன் குளிர்சாதன வசதி, மின்விசிறி, ஸ்னானம் செய்வதற்கு சுடுநீர் போன்ற வசதி களுடன் இருப்பதற்கு வகை செய்தார். அவர்கள் நோய் வாய்ப் பட்டாலும் அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதற்கும் அனுமதி அளிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் இருந்தார்.
இதுதான் ஜனநாயகவாதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களின் நிர்வாகத்திற்கும், அராஜகத்தை கடைப்பிடித்து தனது அர சியல் எதிராளிகளை துன்புறுத்திய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெய வர்தனவின் நிர்வாகத்திற்கும் இடையில் இருந்த பெரும் இடை வெளியாகும்.
-Thinakaran
Leave a comment