UEFA சம்பியன் கிண்ணம்: செல்சி அபார வெற்றி!

-MJ

நேற்றிரவு ஜேர்மனியின் மியூனிச் நகரில் இடம்பெற்ற ஐரோப்பா உதைப்பந்தாட்டக் கழகங்களுக்கான (UEFA) சம்பியன் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஜெர்மனியின் முன்னணிக் கழகமான பேயன் மியூனிச் மற்றும் இங்கிலாந்தின் முன்னணிக் கழகங்களுள் ஒன்றான செல்சி  ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் களமிறங்கி இருந்தன.

முதல் 90 நிமிட ஆட்டத்தில் 1:1 என சம நிலையில் நிறைவடைந்த போட்டியின் முடிவால் மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் முடிவு கிடைக்கவில்லை. இதனால் பெனால்டி உதைகள் மூலம் வெற்றி தோல்வி நிர்ணய ஆட்டம் இடம் பெற்றது. இதில் செல்சி 4:3 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டி ஐரோப்பிய கழகங்களுக்குள் சம்பியன் பட்டத்தை சூட்டிக் கொண்டது. இவ் வெற்றியானது செல்சி அணியின் உதைப்பந்தாட்ட வரலாற்றில் முதல் ஐரோப்பா வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment