மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்
மன்னார் மாவட்டத்தில் அரசாங்க காணிகளை சிலர் ஆக்கிரமிப்பதையே நான் எதிர்க்கின்றேன். முஸ் லிம்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதை நான் எதிர்க்கவில்லை. முஸ்லிம்கள் வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவனும் நானே என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாந்தை மேற்குப் பிரிவைச் சேர்ந்த விடத்தல் தீவு முஸ்லிம்கள் அரச அங்கீகார மின்றி சன்னார் கிராமத்திலுள்ள காணிகளை தமது சொந்தப் பாவனைக்கெனக் கூறி ஆக்கி ரமிக்கின்றனர். இதே போன்று நானாட்டான் அச்சன் குளத்திலும் காணி ஆக்கிரமிப்பு இடம்பெறு கிறது. இதேவேளை, விடத்தல் தீவைச் சேர்ந்த 470 தமிழ் குடும்பங்கள் அரச காணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாந்தை மேற்கு கிராம சேவகரிடம் முறையாக விண்ணப்பித்துள்ளன.
இந்த விண்ணப்பங்கள் இன்னமும் பரிசீலிக்கப்படாமல் மாந்தை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கிடக்கின்றன. மேற்கண்டவாறே நான் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
அரசாங்க காணிகளைப் பெற்றுக் கொள்வதில் ஒரு வழிமுறை இருக்கின்றது. அதைப் பின்பற்ற வேண்டும். விடத்தல் தீவில் 470 தமிழ் குடும்பங்கள் காணிக்கு விண்ணப்பித்திருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
Leave a comment