கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெகு விரை வில் அதற்கான அறிவிப்பு உத்தியோக பூர்வமாக விடுக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்படலாம் என்னும் செய்தி செவி வழியாகப் பரவியதுமே அரசியல் கட் சிகள் பலவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டன. இப்போது அது ஓரளவு உறுதியாகிவிட்டதால் ஏற்பாடுகள், பேச்சுவார்த்தைகள், கூட்டு முயற்சிகள் என்று தேர்தல் சூடு பிடித்துள்ளதைக் காண முடிகிறது.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அது மூவின மக்களும் வாழும் ஒரு மாகாணம். அங்கு மூவின மக்களும் ஓரணியில் ஒற்றுமையாகத் திகழ்வதன் மூலமே தாம் விரும்பும் ஒரு வரை முதலமைச்சராக்க முடியும் என்பது உண்மை. தமிழரோ அல்லது முஸ்லிம் ஒருவரோ தனி த்து நின்று தாம் சார்ந்த இன மக்களின் வாக்குகளால் மட்டுமே முதலமைச்சராக வரலாம் என் பது இலகுவில் கைகூடக்கூடிய ஒன்றல்ல.
கிழக்கில் தமிழ் – முஸ்லிம் மக்கள் தமது ஒற்றுமையின் பலத்தைக் காட்டி போட்டியைத் தவி ர்த்து வாக்குகளைச் சிதறடிக்காது, தமக்கிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி இரு சமூகங்க ளுக்கும் சேவை செய்யக்கூடிய ஒருவரைத் தமது முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும். முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்த பின்னர் கிழக்கில் நடைபெற்ற மாகாண சபை தேர்த லில் அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக ஓரணியில் திரண்ட மையால் ஒரு தமிழ் முதலமைச்சரைத் தெரிவு செய்ய முடிந்தது.
ஆனாலும் அன்று தமிழரா, முஸ்லிமா என்றொரு பிரச்சினை தலைதூக்கியது எனினும் ஒற் றுமை, விட்டுக்கொடுப்பு காரணமாக அரச தலைமையின் வழிகாட்டலில் அதற்கு தீர்வு காணப் பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளவும் பட்டது. அன்றைய தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு போட்டியிடவில்லை. பிரதான கட்சிக்குள்ளே அதிக விருப்பு வாக்கைப் பெறுவதி லேயே போட்டிநிலை காணப்பட்டது.
ஆனால் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் போட்டியிடலாம் என தெரிவிக்கப்படுகி றது. வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த தமிழ்க் கூட்டமை ப்பு இனியும் அந்த உறுதிப்பாட்டில் தொங்கிக் கொண்டிருப்பதில் எவ்வித பலனுமில்லை என் பதை உணர்ந்துள்ளனர். அதனால் வடக்கு – கிழக்கு இணைப்பு எனும் கொள்கையைக் கைவி ட்டே தமிழ்க் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிடவுள்ளது.
தமிழ்க் கூட்டமைப்பு களமிறங்கினால் அரசாங்க கட்சிக்கும் அதற்குமிடையே கடுமையான போட்டி நிலை காணப்படும். அதனைவிட கிழக்கில் பலம் மிக்க கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் காணப்படுகிறது. அக்கட்சி இன்னமும் தனது முடிவை எடுக்கவில்லை. பெரும்பா லும் அரசாங்க கட்சியுடன் இணைந்தே அது போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார ணம், அக்கட்சி தற்போது அரசுடன் இணைந்துள்ளது. அக்கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த அரசில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக உள்ளார். அது தவிர பிரதியமைச்சர் பதவி ஒன்று அக்கட்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கட்சி அரசிற்கு எதிராகச் செல்ல வாய்ப்பில்லை.
இதுதவிர கிழக்கில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், கிழக்கு மாகாண சபை யின் தற்போதைய முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிகளும் பலம் மிக்க கட்சிகளாக உள்ளன. அ. இ. மு. கா. மற்றும் தேசிய காங்கிரஸ் என்பன நிச்சயம் அரசுடன் தோளோடு தோளாக நிற்கும் கட்சிகள் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் பெரும்பாலும் அரசுடன் இணைந்தே செயற் படும். அண்மையில் அக்கட்சியின் தலைவர் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துரையாடியதன் பின்னர் அதில் திருப்தி கண்டுள்ளார். தமிழ்க் கூட்டமைப்புடன் அக்கட்சி ஒருபோதும் கூட்டு வைக்காது என்பது முதல்வரின் அறிக்கைகளிலி ருந்து தெளிவாகத் தெரிகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ¤ம் கூட்டுச்சேர வாய்ப்பு உண்டெனச் சிலர் நம்பினாலும் அக்கூட்டை தமிழ்க் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பி ல்லை. அரசாங்கத்தை வெளிப்படையாகவே எதிர்த்து வரும் தமிழ்க் கூட்டமைப்பின் குறுந் தலைவர்கள் அரசின் பங்காளிக் கட்சியான மு.கா.வுடன் கூட்டு வைப்பதை விரும்பமாட்டார்கள். அதேபோன்று தமிழ்த் தேசியம் எனும் கொள்கையுடைய தமிழ்க் கூட்டமைப்புடன் கூட்டு வைப்பதை மு. கா. விலுள்ள ஏனைய உயர்பீட உறுப்பினர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
இதன் காரணமாக அரசாங்கக் கட்சியுடன் கிழக்கில் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி சபை களில் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களைக் கொண்டுள்ள அ. இ. மு. கா., தேசிய காங்கிரஸ் என் பன இணைந்தாலேயே இலகுவாக மாகாண சபையைக் கைப்பற்றி விடலாம். இக்கூட்டணியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் இணைந்து கொண்டால் வெற்றி மிக மிக உறுதியாகிவிடும். இந்த வெற்றியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் இணைய வேண்டும் என்பதே பலரதும் விருப்பாக உள்ளது.
கிழக்கில் மட்டுமல்ல நாட்டின் எந்தப் பகுதியிலும் அரசாங்கக் கட்சி வெற்றிபெறுவதே மக்க ளுக்குப் பயனுள்ளதாக அமையும். பிரதேச அபிவிருத்திக்கு மத்திய அரசின் பங்களிப்பும், ஒத் துழைப்பும் அவசியம். சகல மட்டங்களிலும் ஒரே கட்சி ஆட்சி புரியும் போது அபிவிருத்தியும் இரட்டிப்பாக அமையும். மத்திய அரசில் எதிரணி மாகாண அரசில் ஆளும் அணி என்பது நடைமுறையில் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
அடுத்து முதலமைச்சராக தமிழரோ அல்லது முஸ்லிம் ஒருவரோ வருவது குறித்து இன்றே விவாதிக்காது ஒன்றுமையாக ஓரணியில் திரண்டு ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்து முதலில் சிந்திக்க வேண்டும். அரச தரப்புக் கட்சியோ அல்லது எதிர்த்தரப்போ தமிழ் முதலமைச்சர், முஸ் லிம் முதலமைச்சர் என்று கூறி கிழக்கில் ஒற்றுமையாக வாழும் மக்களைக் கூறுபோடாது செயற் பட வேண்டும்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தது போன்று வேட்பாளர்கள் பட்டியலே வெளியிடப்படும். முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான் என்று குறிப்பிடப்பட மாட்டாது.
வெற்றிபெற்ற பின்னர் திறமையான ஒருவரைக் கட்சி மூலமாகத் தேர்ந்தெடுக்கலாம். அமை ச்சர் பசிலின் கருத்தை கட்சித் தலைவர்கள், மக்கள் ஆதரவாளர்கள் மட்டுமல்ல போட்டியிடவு ள்ள வேட்பாளர்களும் நிச்சயம் வரவேற்பர் என்பதில் ஐயமில்லை.
-தினகரன்
Leave a comment