கிழக்கு பல்கலைகழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் கடந்த 15 நாட்களாக மேற்கொண்ட வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டம் நிறைவுபெற்றுள்ளதாக பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் எஸ்.சிவா தெரிவித்தார்.
உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவுடன் நேற்று கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து போராட்டம் நிறைவுபெற்றதாக அவர் தெரிவித்தார்.
அகில இலங்கை பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் எஸ்.புலேகொட மற்றும் கிழக்கு பல்கலைகழக நுண்கலைபீட மாணவர் சங்க பிரதிநிதிகள் அமைச்சருடனான சந்திப்பில் பங்குகொண்டனர்.
மாணவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவுசெய்யப்படு என உயர் கல்வி அமைச்சர் வழங்கிய உறுதிப்பாட்டை அடுத்தே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் உதவி சிரேஷ்ட பதிவாளரை இடமாற்றுமாறு கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment