குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 20,000 வீடுகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கென இவ்வருட இறுதிக்குள் 20,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமல் பெரேரா தெரி வித்தார்.

மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டம் கருத்திட்டத்தின் கீழ் தற்போது 20 சிறிய நகரங்கள் அபி விருத்தி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், கொம்ப னித்தெருவில் உடைக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக 436 வீடு கள் நிர்மாணிக்கப்பட்டு வழங் கப்படுமெனவும் தெரிவித்தார்.

இந்த வீடுகளை நிர்மாணிப் பதற்கு 360 மில்லியன் ரூபா செலவிடப்படுவதுடன் இது தொடர்பான ஒப்பந்தமொன்று இந்திய நிறுவனமொன் றுடன் கைச்சாத்திடப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பத்தர முல்லை ‘செத்சிரி பாய’வில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அரசாங்க நிர்வாகக் கட்டடத் தொகுதி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழவில் உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நகர அபிவிருத்தி அதிகார சபை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கென 10,000 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அத்துடன் மேலும் 10,000 வீடுகளை இவ்வருடத்தில் நிர்மாணிக்கும் நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட பல நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. கொம்பனித்தெருவில் உடைக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடுகள் வழங்கும் வரை மாதாந்தம் 15,000 ரூபா வீதம் வாடகைப் பணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-Thinakaran

Published by

Leave a comment