- 13,680 வீரர்கள் பங்கேற்பு
- முப்படை வீரர்கள், பொலிஸார் அணிவகுப்பு
- விமானப்படை, கடற்படை போர் கலங்கள் சாகசம்
யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் காலை 8.00 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும் தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் மாலை 4.00 மணிக்கு பாராளு மன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதமர் தி. மு. ஜய ரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் திருமதி கலாநிதி ஷிராணி பண் டாரநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஹான் குணதிலக்க, இரா ணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாய க்க, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன், சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் உட்பட அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர் கள், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
காலி முகத்திடலில் நடைபெறவுள்ள வெற்றி அணிவகுப்பு வைபவத்தில் இம்முறை இராணுவம், கடற்படை, விமா னப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் என்ற அடிப் படையில் 13,680 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவற்றில் 852 அதி காரிகளும், 12,828 வீரர்களும் அடங்குவர்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட் டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் ரம்புக்பொத்த தலைமையில் நடைபெற வுள்ள இந்த அணிவகுப்பில் வடக்கு, கிழக்கு மற்றும் வன்னி படையணியினர் பங்குகொள்ளவுள்ளனர்.
அத்துடன் மனிதாபிமான நடவடிக்கை யின் போது களமுனையில் பயன்படுத்தப் பட்ட சகல கனரக ஆயுத தாங்கி வாக னங்கள், கவச வாகனங்கள், சமிக்ஞை கருவிகள் போன்ற இராணுவத்தின் 148 வாகனங்களும், கடற்படைக்குச் சொந்தமான 72 யுத்தக் கப்பல்கள், தாக்குதல் கப்பல்கள், அதிவேக படகு களும், விமானப் படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களும் காலி முகத்திடல் கடல் மற்றும் வான் பரப்பில் சாகசங்களை காண்பிக்கவுள்ளன.
ஜனாதிபதி அவர்களின் வருகையைத் தொடர்ந்து பிரதான வைபவம் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர்களினால் பிரதான மேடைக்கு அழைத்துச் செல்லப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மங்கள வாத்தியங்களின் முழக்கத்திற்கு மத்தியில் தேசிய கொடியை ஏற்றி வைபவத்தை ஆரம்பித்து வைப்பார்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு மரியாதை வழங்கும் வகையில் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும்.
அத்துடன் நாட்டிலிருந்து பயங்கர வாதத்தை முற்றாக ஒழித்து தாய் நாட்டை மீட்டெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிர் நீத்த படை வீரர்களில் 15 முப்படை வீரர்களுக்கு இம்முறை பரம வீர விபூஷண விருது வழங்கப்படவுள்ளது. இவர்களில் 13 இராணுவ வீரர்களும், ஒரு கடற்படை வீரர் மற்றும் ஒரு விமானப் படை வீரரும் அடங்குவர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் கள் இந்த உயர் விருதுக்கான பதக்கங்களை உயிர்நீத்த முப்படை வீரர்களின் குடும்ப உறவினர்களிடம் வழங்கவுள்ளார்.
இந்த உயர் விருது இதுவரையும் ஏழு வீரர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தினகரனுக்குத் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது காலிமுகத்திடலி லிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்த உள்ளார்.
அணிவகுப்புகள் இராணுவம்
இராணுவ அணிவகுப்பில் மனிதாபி மான நடவடிக்கையில் ஈடுபட்ட சகல படைப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கிழக்குப் படையணியின் அணிவகுப் புக்கு மேஜர் ஜெனரல் அமல் கருணா சேகரவும், வடக்கு படையணியின் அணிவகுப்புக்கு மேஜர் ஜெனரல் பிர சன்ன சில்வாவும், வன்னி படையணியின் அணிவகுப்புக்கு மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்கவும் தலைமை வகிக்க வுள்ளனர்.
இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 400 அதிகாரிகளும் ஐயாயிரம் படைவீரர் களும் பங்கு கொள்ளவுள்ளதுடன், மனிதாபிமான நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட 148 தாக்குதல், யுத்த, கவச, கனரக, சமிக்ஞை வாகனங்கள் செல்லவுள்ளன.
கடற்படை
கடற்படை அணிவகுப்பில் மனிதாபி மான நடவடிக்கையில் ஈடுபட்ட சகல படைப்பிரிவுகளும் பங்குகொள்ளவுள்ளன.
260 அதிகாரிகளும், நான்காயிரம் வீரர்களும் அடங்குவர்.
கொமடோர் நிமல் சரத்சேன கடற்படை அணிவகுப்பின் கட்டளை அதிகாரியாக தலைமை ரிகிக்கவுள்ளார்.
கடற்படையின் கிழக்கு படையணியின் அணிவகுப்புக்கு ரியர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகேவும், வன்னி படையணியின் அணிவகுப்புக்கு ரியர் அட்மிரல் ரொஹான் அமரசிங்கவும், வடக்கு படையணியின் அணி வகுப்புக்கு ரியர் அட்மிரல் ரவீந் திர விஜேகுணரட்னவும் தலைமை வகிக்கவுள்ளனர்.
கடற்படையின் 80 அதிகாரிகளும் 1134 வீரர்களும் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அணிவகுப்புக்கு மேலதிகமாக கடற் படைக்குச் சொந்தமான 72 கப்பல்கள், அதிவேக படகுகள் காலி முகத்திடல் கடலில் சாகசங்களை காண்பிக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
ஆழ்கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் ‘சாரல’, ‘சபகர’, ‘சமுதுர’, ‘சக்தி’, ஆகிய பாரிய கப்பல்கள், ‘சுரணிமல’, ‘நந்தமித்ர’, ‘உதார’, ‘பிரதாப’, ‘ரணரிசி’, ‘ரணஜய’, ‘அபீத-2’ ஆகிய கப்பல்கள், 12 அதிவேக டோரா படகுகள் உட்பட பெருந்தொகையான சிறிய ரக படகுகளும் கடலில் அணிவகுத்து செல்லவுள்ளன.
விமானப்படை
விமானப்படை அணிவகுப்பில் எழுபது அதிகாரிகளும் 1352 வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளதுடன், 32 விமா னங்கள் மற்றும் ஹெலி கொப்டர்கள். கொழும்பு வான் பரப்பில் பறந்து செல்லவுள்ளதுடன் சாகசங்களையும் காண்பிக்கவுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் குறூப் கப்டன் என்ரு விஜே சூரிய தெரிவித்தார்.
எயார் கொமடோர் சாகர கொடகதெனிய விமானப்படை அணிவகுப்பின் கட்டளை அதிகாரியாக தலைமை வகிக்கவுள்ளார்.
விமானப்படையின் கிழக்கு படையணி யின் அணிவகுப்புக்கு குறூப் கெப்டன் உதயணி ராஜபக்ஷவும், வடக்கு படை யணி அணிவகுப்புக்கு குறூப் கெப்டன் கபில வணிகசூரியவும், வன்னி படையணி அணிவகுப்புக்கு குறூப் கெப்டன் ஷிஹான் பெர்னாண்டோவும் தலைமை வகிக்கவுள்ளனர்.
பேருவளைக்கும், பெந்தொட்டைக்கும் இடைப்பட்ட பகுதிகளிலிருந்து இந்த விமானங்கள் பறக்கவுள்ளன. கல்கிசை வான் பரப்பில் ஒன்றிணையும் விமா னங்கள் ஒவ்வொன்றும் 20 செக்கன்கள் இடைவெளியில் காலி முகத்திடல் வான் பரப்பில் பறக்கவுள்ளன.
விமானப்படையின் மிக்-27, கபீர்-01, எப்-7, கே-8, ரக அதிவேக தாக்குதல் விமானங்களும், ஏ. என். -32, வை- 12, சி-130, பிரிஎ1, பி- 206, ரக விமானங்களும், பெல்- 412, பெல்- 212 ரக ஹெலிகொப்டர்களும் அடங்கும்.
பொலிஸ்
பொலிஸ் அணி வகுப்பில் 60 அதிகாரிகளும் ஆயிரம் பொலிஸாரும் கலந்த கொள்ளவுள்ளனர்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தன தலைமையில், சிரேஷ்ட பொலிஸ் அத்திட்சகர் யு.கே. திஸாநாயக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் அத்தியட்சகர் டி. எம். மத்துமபண்டார ஆகியோர் முன்னணி வகித்து செல்லவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்பு படை
சிவில் பாதுகாப்பு படையின் 30 அதிகாரிகளும் 500 வீரர்களும் இங்கு அணிவகுத்து செல்லவுள்ளனர்.
அங்கவீனமுற்ற படைவீரர்கள்
யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற படைவீரர்களில் சுமார் 200 பேர் சக்கரநாற்காலியில் இந்த அணிவகுப்பில் செல்லவுள்ளனர்.
- -Thinakaran
Published by
Leave a comment