-MMS
கொழும்பு – 06, வெள்ளவத்தை, முருகன் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய மொஹமட் வஸீம் தாஜுதீனின் எனும் இலங்கை தேசிய ரக்பி அணியின் வீரர் நேற்று நாரஹன்பிட்டியவில் இடம்பெற்ற விபத்தில் கருகிய நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட் டுள்ளார். சாலிகா மைதானத்திற்கு அருகிலுள்ள பார்க் வீதியில் நேற்று அதிகாலை 12.50 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சென்தோமஸ் கல்லூரியின் முதல் நிலை ரக்பி அணிக்காக விளையாடிய தாஜுதீன் 2003 ஆம் ஆண்டில் கல்லூரி அணியின் உப தலைவராக செயல் பட்டார். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இலங்கை அணிக்கு தெரிவான அவர் 2008 ஆம் ஆண்டு சர்வதேச ஹொங்கொங் ரக்பி செவன் அணிக்காக விளையாடினார். கடந்த 2009 ஆம் ஆண்டு பார்க் கழக அணியில் இணைந்த தாஜுதீன் ஆண்டின் சிறந்த ரக்பி வீரராகவும் தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment