-அமைச்சரவை தீர்மானம்
வெளிநாடுகளில் வசிப்பதன் மூலம் இலங்கை பிரஜா உரிமையை இழந்தவர்களுக்கு கடல் கடந்த இலங்கையர்கள் என்ற அடிப்படையில் இரட்டைப் பிரஜா உரிமையை வழங்கவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்த அமைச்சரைவப் பத்திரத்திற்கு ஏற்ப இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் மீண்டும் இலங்கைக்கு வரவூம் இங்கு தங்குவதற்கும் வழிவகுக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இங்கு வந்து தங்குகின்றவர்களுள் ஐந்து வருடங்களைக் கடந்தவர்களுக்கு இரட்டைப் பிரஜா உரிமைக்காக விண்ணப்பிக்க முடியம்.
மேலும் அத்தியவசிய தேவைகளின் பொருட்டு குறிப்பிட்ட கால எல்லையைக் கடக்காத போதிலும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கேற்ப இலங்கை பிரஜா உரிமையை இழந்த ஒருவருக்கு இரட்டைப் பிரஜா உரிமையை வழங்கும் வகையில் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Leave a comment