இந்தியாவில் ஆயுர்வேதம், யூனானி, சித்த வைத்தியம் மற்றும் ஹோமியோபதி வைத்தியத் துறைகளில் பட்டப்படிப்பு, பட்டபின் படிப்பு மற்றும் கலாநிதி பட் டப்படிப்புகளை புலமைப்பரிசில் அடிப்படையில் பெறுவதற்கு இலங்கை மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2012-2013ம் கல்வி ஆண்டிற்கு இந்த மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள். இந்திய அரசாங்கம் இவ்விதம் 10 புலமைப் பரிசில்களை மாத்திரம் வழங்க உள்ளது. திறமை, கல்வித்தகைமை அடிப்படையிலேயே மேற்படி 10 பேர் தெரிவு செய்யப்பட வுள்ளனர்.
இந்த மாணவர்களை தெரிவு செய்யும் பணியை இந்திய அரசாங்க அதிகாரிகள் இலங்கையின் உயர்கல்வி அமைச்சுடன் கலந்துரையாடியே மேற்கொள்வர். நம் நாட்டவர் இந்தியாவின் சிறப்புப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்விப் பட்டங்களை பெற வேண்டுமென்ற ஆர்வத்துடன் இலங்கை அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்படும் ஒவ்வொருவருடைய கல்விச் செலவை முழுமையாகவும் இவர்கள் இந்தியாவில் கல்வி பயிலும் போது உணவு மற்றும் ஏனைய செலவுகளுக்கு மாதாந்தம் ஒரு குறிப்பிட்ட தொகையையும் இந்திய அரசாங்கம் வழங்கும்.
இந்தப் புலமைப்பரிசில் பெறுபவர் களுக்கு தங்குமிட வசதிக்கான விசேட அலவன்ஸ¤ம், புத்தகங்கள், காகிதாதிகளை வாங்குவதற்கென வருடாந்தம் ஒரு தொகை பணம் அன்பளிப்பாகவும் கொடுக்கப்படும். இந்த மாணவ, மாணவியருக்கு இலவச வைத்திய வசதிகளையும் இந்தியாவில் செய்து கொடுக்கப்படும்.
புலமைப்பரிசில்களின் அடிப்படையில் இந்தியாவில் கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவியர் தாங்கள் பற்றிய முழு விபரங்களை உயர்கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கற்கை நெறி தொடர்பான ஏனைய ஆவணங்களையும் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப்படிவங்களை இலக்கம் 18, வோட்ஸ் பிளேஸ், கொழும்பு 7, எனும் உயர்கல்வி அமைச்சின் தலைமைக்காரியாலயத்திற்கு 2012, மே மாதம் 30ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பபடிவங்களை உயர்கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Leave a comment