யாழ்-பலாலி ஆசிரியர் கலாசாலை மூடப்படுகிறது.

இலங்கையின் கல்வி வரலாற்றில் ஓர் மைல்கல்லாக இருந்த யாழ். பலாலியில் 50 வருடங்களாக இயங்கி வந்த பலாலி ஆசிரியர் கலாசாலை முற்றாகப் மூடப்பட்டுள்ளது.

தமிழ் கல்விச் சமூகத்திற்கு அளப்பரிய சேவையாற்றிய பலாலி ஆசிரிய கலாசாலை மூடப்பட்டமையானது தமிழ் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் பாதிப்புக்களை ஏற்படுத்துமென கல்விச் சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.

கடந்தகால அனர்த்தங்களினால் சொந்த இடத்திலிருந்து இடம் பெயர்ந்து பல்வேறு இடங்களில் இயங்கி இறுதியாக தற்போது திருநெல்வேலியில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

பலாலி ஆசிரியர் கலாசாலையில் கிறிஸத்தவ நாகரீகம் மற்றும் ஆங்கில பாடநெறிகள் நடைபெற்று வந்தன. குறித்த பாடநெறிகளும் ஆங்கிலம் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலைக்கும் கிறிஸ்தவ நாகரீகம் கோப்பாயுடன் இணைக்கப்பட்டதையடுத்து நிரந்தரமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பலாலி ஆசிரியர் கலாசாலை மீண்டும் இயங்க வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டி வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி கல்வி அமைச்சிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆளுனர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மாவட்ட மாணவர்களின் கல்வி பெறுபேற்றின் வீழ்ச்சி மற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கான பயிற்சியின் அவசியம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி கல்வி அமைச்சிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

Published by

Leave a comment