சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி

-Tamilmirror

சவூதி அரேபியாவின் றியாத் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இவ்விபத்தில், அட்டாளைச்சேனை கோணாவத்தையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுலைமாலெப்பை அப்துல் காதர் (வயது 52) என்பவரே உயிரிழந்தார்.

மேற்படி நபர் கடந்த 13 வருடங்களாக சவூதி அரேபியாவின் றியாத் நகரிலுள்ள நிறுவனமொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார். இந் நிலையில், விடுமுறையில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வாடகை காரொன்றில் பயணித்து கொண்டிருந்த போதே இவர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தின்போது குறித்த நபருடன் பயணம் செய்த மேலும் இருவர் சம்பவ இடத்திலே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த அப்துல் காதரின் ஜனாஸா இன்றைய தினம் சவூதி அரேபியாவின் றியாத் நகரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

மேற்படி நபர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சில காலம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராவும் பணியாற்றியிருந்தார்.

Published by

Leave a comment