சென்றவருடம் இரு வேறு வகையான பாடத்திட்டங்களின் கீழ் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான இஸட் (Z) புள்ளியை கணிப்பதற்கான அளவீட்டு முறைமையை மீண்டும் மாற்றுவதற்கு உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனால் அடுத்த வருட பல்கலைக்கழக கல்வியாண்டுக்கு மாணவர் அனுமதி மேலும் தாமதமாகலாம் என கருதப்படுகிறது.
புதிய பாடத்திட்டத்தின் கீழும் மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பதற்கு பொதுவான கணிப்பு முறைமையனெர்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உருவாக்கியது. எனினும் இதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
அவர்களில் சிலர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தொடுத்தனர்.
இந்நிலையில் இஸட் புள்ளியை கணிப்பதற்கான அளவீட்டு முறைமையை மீளமைப்பதற்கான குழுவொன்றை தான் நியமிக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறினார். ஜனாதிபதியின் உத்தரவுக்கிணங்க இந்நடவடிக்கையை தாம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a comment