மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சச்சியார் வீதியில் 14 வயது சிறுவன் ஒருவரை கடத்திய நால்வர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சிலாபத்தைச் சேர்ந்த இரண்டு சிங்களவர்களும் வழைச்சேனை கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு தமிழர்களுமே இக்கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சிறுவனை வானுக்குள் ஏற்றி கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது சத்தத்தை அவதானித்த உறவினர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
இதே நேரம் இன்று காலை கல்குடாவில் சிறுமி ஒருவரைக் கடத்த முயன்று முடியாது போன நிலையில் பின்னர் இச்சிறுவன் கடத்தப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சிறுவர்கள் புதையல் எடுப்பதற்காக பயன்படுத்துவதற்கே கடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment