கல்முனையில் ஆர்ப்பாட்டம்

கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் சுகயீன விடுமுறையில் இருந்து இன்று திங்கட்கிழமை வைத்தியசாலைக்கு கடமைக்குத் திரும்பிய நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை கணக்காளருக்கு எதிராக வைத்தியர்கள் தாதியர்கள்ள் மற்றும் ஊழியர்கள் காலை 10:15 மணியளவில் வைத்தியசாலையின் முன்னால் ஒன்று திரண்டு கணக்காளரை இடமாற்றுமாறு சுலோகங்களை தாங்கியவாறு பல கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை பிரதான கணக்காளருக்கு எதிராக வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று (14) காலை வைத்தியசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது ,

இதனையடுத்து கணக்காளர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு சென்றனர்.

இது குறித்து கணக்காளர் கந்தசாமி ஜெகதீஸ்வரன் தெரிவிக்கையில்,

´இவ் வைத்தியசாலையின் கணக்காளராக கடமையேற்ற காலம் தொடக்கம் நேர்மையாக வேலை செய்துகொண்டிருந்ததாகவும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் எனது காரியாலய மேசையையும் இருப்பிடத்தையும் காரணமின்றி இடவசதியற்ற வேறு இடத்திற்கு திடீரென மாற்றியுள்ளனர்.

இதனால் எனது கடமையை செய்யமுடியாது போனது இது தொடர்பாக சுகாதார அமைச்சருக்கு முறைப்பாடு செய்ததுடன் ஏற்கனவே ஏற்பட்ட விபத்தினால் எனது காலில் ஏற்பட் காயத்தின் வலி காரணமாக வைத்தியர் படுக்கை ஓய்வு எடுக்குமாறு தெரிவித்ததையடுத்து இரண்டு மாத சுகயீன விடுமுறையின் பின்னர் இன்று கடமைக்கு திரும்பிய பின்னர் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இது ஒரு வேதனைக்குரிய விடயமாகும்.

சிலரின் அநியாயத்துக்கு ஒத்துழைக்காததன் காரணமாகவே என்னை களங்கப்படுத்த வேண்டும் என சில தீயசக்திகள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சருக்கு முறைப்பாடு செய்துள்ளளேன். என் கடமையை செய்யவிடாது தடுத்து எனக்கு களங்கம் விளைவித்வர்களுக்கு எதிராக மனிதஉரிமை ஆணைக்குழு மற்றும் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளேன்´.

இவ்வாறு கணக்காளர் கந்தசாமி ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றிய காலப்பகுதியில் குற்றச்சாட்டிற்குள்ளாகிய உத்தியோகத்தர், அவர் மீது விசாரணைகள் நடாத்தப்பட்டு முடிவுகள் எதுவும் வெளிவராத நிலையில் பல வாரங்களின் பின் மீண்டும் கடமைக்கு திரும்பியமைக்கு வைத்தியசாலை ஊழியர்கள் இன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த கணக்காளர் தொடர்பில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் சுகாதார அமைச்சுக்கு அறிவித்ததையடுத்து அவர் மீது நான்கு விசாரணைகள் நடாத்தப்பட்டு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Published by

Leave a comment