கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இம்முறையும் முஸ்லிம் முதலமைச்சர் வேட்பாளரை மையமாகக் கொண்டே களத்தில் இறங்குவதாகவும் இது தொடர்பாக அரச உயர்மட்டத்துடன் தாம் பேச்சு நடத்தியுள்ளோம் என்றும் மாகாண அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.
கடந்த முறை நாம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டி யிட்டு கணிசமான பிரதிநிதிகளைப் பெற்றோம். எனினும் அரசுடனான இணக்கப்பாட்டின் பின்னர் பிள்ளையான் முதலமைச்சரானார். மாகாணசபையில் எமக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டது.
இம்முறையும் நாம் களத்தில் இறங்குகின்றோம். எமது கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் அமீரலி, நான் மற்றும் காத்தான்குடி சார்பான இன்னுமொரு வேட்பாளர் போட்டியிடுகின்றோம்.
மாகாண அமைச்சுப் பதவி எமது கட்சிக்கு வழங்கப்பட்டதன் பின்னர் கணிசமான அபிவிருத்திகளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Leave a comment