விளையாட்டு போட்டியில் மீராபாலிகா முதலிடம்

-MFS

இவ்வாண்டுக்கான (2012) வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் காத்தான்குடி மட்/ மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிகூடிய புள்ளிகளைப் பெற்று பெண்கள் பாடசாலைகளில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனையாளர்களைக் கெளரவிக்கும் விழா நேற்று (10) காத்தான்குடி மீரா பாலிகா மண்டபத்தில் வித்தியாலய அதிபர் எம். எம். இஸ்மா லெப்பை தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். ஏ. நஸீரா சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்ட பாலிகா மாணவிகளுக்கு வெற்றிக் கேடயங்களும், சான்றிதழும் வழங்கி கெளரவித்தார்.

Published by

Leave a comment