இலங்கையை பொருளாதாரத் துறையிலும் கல்வித் துறையிலும் முன் னணிக்குக் கொண்டுவர வேண்டுமாயின் நம் நாட்டு மக்களின் தக வல் தொழில்நுட்ப அறிவை பெருக்குவது அவசியமாகும். தகவல் தொழில்நுட்பத்தின் அவசியத்தை பாமர மக்களிடையேயும் படிப்பறிவு டைய நகரப்புற மக்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இப்போது தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
2016 ஆம் ஆண்டளவில் இலங்கையை ஆசியாவின் விந்தைக்குரிய நாடாக உயர்த்துவதற்கு தகவல் தொழில்நுட்ப அறிவு அவசியம் என் பதை உணர்ந்திருக்கும் அரசாங்கம், அந்த இலட்சியக் கனவை நிறை வேற்றும் முகமாக இப்போதிருந்தே பாடசாலைகள் அனைத்திலும் தக வல் தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுப்பதற்கான கணனி நிலையங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
அரசாங்கம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் நனசல திட்டத்தின் கீழ் நாடு முழுவதற்கும் இணையத்தள இணைப்பை ரி ஷிri lanka திட்டத் தின் கீழ் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.
இதன் மூலம் மேலும் பலருக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் உபசெயலாளரும், தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பிரதி அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாப்பிட் டிய தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டளவில் இலங்கையில் உள்ள மக்களில் ஏறத்தாழ 75 சதவீதமானோருக்கு தகவல் தொழில்நுட்ப அறிவைப் புகட்டுவதற்கு சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ள பிரதி அமைச்சர், அவ்வாண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் அரசாங்கத்துக்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெறக்கூடியதாக இரு க்குமென்றும் இதனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் 2 இலட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பக் கல்வியை மாணவர்கள் மத்தியில் புகட்டுவதற்கு சிறந்த இடமாக பாடசாலைகளே விளங்குகின்றன. எனவே, பாடசாலை மட்டத்தில் இருந்தே தகவல் தொழில்நுட்ப அறிவை, இந்நாட்டு எதிர் கால சந்ததியினருக்கு புகட்ட வேண்டும் என்ற மஹிந்த சிந்தனை எதிர் கால எண்ணக்கருவை மையமாக வைத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக 2012 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 500 பில்லியன் டொலரை ஒதுக்கீடு செய்துள்ளார். இதனடிப்படையில் முதல் கட்டமாக 200 கிராமிய பாடசாலைகளில் கணனி நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இவற்றுக்கு மேலதிகமாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக் குழு நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பாடசாலையைத் தெரிவு செய்து, அப்பாடசாலையில் கணனி நிலையம் ஒன்றை அமை க்க இருக்கின்றது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், பதுளை ஆகிய மாவட்டங்களில் உள்ள இரு பாட சாலைகளில் இந்தக் கணனி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின் றன.
தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும் சகல மாவட்டங்க ளில் உள்ள பாடசாலைகளுக்கும் இந்த கணனி நிலையங்களை ஏற்ப டுத்திக்கொடுப்பதென்றும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவற்றுக்கு ரி ஷிri lanka திட்டத்தின் கீழ் இலங்கை டெலிக்கொம் நிறுவனம் வலைய மைப்பு இணைப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும். யாழ்ப்பாண மாவட் டத்துக்கான இப்பணி இவ்வாண்டு நிறைவுபெறும்.
இலங்கையில் 75 இலட்சம் மக்கள் இன்று கையடக்கத் தொலைபேசி இணை ப்புக்களை பெற்றிருக்கிறார்கள். எனவே, நாடெங்கிலும் இந்தச் சேவையை பெற்றுக் கொடுப்பதற்காக நாம் விசேட ஏற்பாடுகளை செய்து கொண்டி ருக்கின்றோம் என்று தெரிவித்த பிரதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப் பிட்டிய, இதற்கென கொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான வசதிகளை அதிகரித் திருக்கின்றோம் என்று கூறினார்.
கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரத்தைப் போன்று மேலும் பல நவீன தொலைத் தொடர்பு கோபு ரங்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.
தேசத்துக்கு மகுடம் கண்காட்சிகளை வருடா வருடம் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஒழுங்கு செய்யும்போது அப்பிரதேசங்களின் வீதிகளை சீரமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குதல் ஆகியவற்றுக் காக அரசாங்கம் பெருமளவு பணத்தை முதலீடு செய்கின்றது. அனுராத புரத்தில் இவ்வாண்டு முடிவடைந்த தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக் காக அரசாங்கம் 20 பில்லியன் ரூபாவை செலவிட்டமை குறிப்பிடத்தக் கது.
2007ஆம் ஆண்டில் அரசாங்கம் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நிகழ்ச் சியை ஆரம்பித்த போது நாட்டில் யுத்த கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. இதனால் மக்கள் வீதியில் இறங்கி நடமாடவும் அச்சப்பட்டார்கள். எங்கு மனித வெடிகுண்டுகள் வெடிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் அஞ் சிய வண்ணம் இருந்தார்கள்.
10 பேர் கூட ஓர் இடத்தில் கூடிநிற்கப் பயந் தார்கள். அத்தகைய பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் அரசாங்கம் தேசத் துக்கு மகுடம் கண்காட்சியை இரண்டு தடவைகள் வெற்றிகரமாக கொழு ம்பில் நடத்தியது. குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தாலும் அரசாங் கத்தின் அபிவிருத்திப் பணி பின்னடையாமல் தொடர்ந்து கொண்டிருந் தது என்று பிரதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
ஆங்கில அறிவும், தகவல் தொழில்நுட்ப அறிவும் இலங்கையை மீண்டும் சர்வதேச அரங்கில் முன்னிலைக்குக் கொண்டுவருவதற்கான பிரதான காரணிகளாக இருப்பதை நன்கு உணர்ந்தமையினால் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஆங்கில அறிவை எதிர்கால சந்ததியின ரிடையே பெருக்குவதற்கும் தகவல் தொழில்நுட்பக் கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கும் எடுத்து வரும் நடவடிக்கைகள் வெற்றிகரமான பயனை இன்று பெற்றுக் கொடுத்து வருகின்றது.
-Thinakaran
Leave a comment