தம்புள்ள ஜும்-ஆ பள்ளிவாயல் அதே இடத்தில் இருக்க வேண்டுமெனவும் பல்லின பல்சமய நாடான இலங்கையில் சகல சமயத்தவர்களினதும் மத உரிமைகளை பாதுகாக்கக் கோரியும் தம்புள்ள பள்ளிவாயல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜரொன்றை அனுப்புவதற்காக இன்று காத்தான்குடியிலுள்ள ஜும்-ஆ பள்ளிவாயல்களில் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஜனாதிபதிக்கு மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து அனுப்பவுள்ள இந்த மகஜரில் பொதுமக்கள் ஆர்வத்தோடு கையொப்பங்களை இட்டனர்.
காத்தான்குடியிலுள்ள ஜும் ஆ பள்ளிவாயல்களில் ஜும் ஆ தொழுகைக்காக வருகை தந்த பொதுமக்கள் அங்கு வைத்திருந்த மகஜரில் கையொப்பமிட்டனர்.
இந்த கோரிக்கைகள் தொடர்பான துண்டுப்பிரசுரமொன்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் இன்று பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Tamilmirror
Leave a comment