-MJ
ஜகார்த்தா விமான நிலையத்தில் தன் உறவுகளைப் பிரிந்த கவலையில்..
நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இந்தோனேசியாவில் மறைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட ரஷ்யாவின் சுப்பர் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘சலாக் மலை உச்சியில் சில சடலங்களை தாங்கள் கண்டதாகவும் ஆனால் எண்ணிக்கையைக் கூறமுடியாமல் உள்ளதாகவும்’ இந்தோனேசிய மீட்புப்படையின் அதிகாரி ‘ககா பிரகாசோ’ கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளான இவ் விமானத்தில் 33 இந்தோனேசியர்களும், 8 ரஷ்யர்களும், 2 இத்தாலியர்களும், அமெரிக்கர் ஒருவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் மற்றும் ரஷ்யா ஊடகவியலாளர்களும், தூதுவர்களும் மற்றும் வர்த்தகர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் எந்தத் தடயங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொல்லப்பட்டவர்;களின் உடல்களைத் தேடி இந்தோனேசிய மீட்புப் படையினர் இரவுபகலாக தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர்.
![20125920302719734_20[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/20125920302719734_201.jpg?w=300&h=198)
Leave a comment