அமெரிக்காவின் மிக உயரிய இராணுவப் பயிற்சிப் பள்ளி ஒன்றில் இஸ்லாம் தொடர்பில் பயிற்றுவிக்கப்பட்டுவதந்த ஒரு பாடத் திட்டத்தை அமெரிக்காவின் மிக மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கண்டித்துள்ளார்.
மாணவர் விரும்பினால் தானாகத் தேர்ந்தெடுத்து படிக்கும் வகையிலான இந்தப் பாடத் திட்டம் முற்றிலும் ஆட்சேபத்திற்குரியது என்றும், மத சுதந்திரம், கலாச்சார ரீதியான விழிப்புணர்வு போன்ற அமரிக்க விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானதாக அமைந்துள்ளது என்றும் இராணுவ ஊழியர்களுடைய கூட்டுத் தலைமையகத்தின் தலைவரான ஜெனரல் மார்ட்டின் டெம்ப்ஸி கூறினார்.
இந்தப் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படுவது சென்ற மாதம் இடைநிறுத்தப்பட்டது.
அமெரிக்கா இஸ்லாத்துடன் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுவருகிறது என்றும், மெக்கா உள்ளிட்ட இஸ்லாமியப் புனித நகரங்கள் மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்துவது பற்றியும் அமெரிக்கா பரிசீலிக்க வேண்டி வரலாம் என்பதுபோலவும் இந்த பாடத்திட்டம் அமைந்திருந்தது.
-BBC-Tamil
Leave a comment