SLIF-UK நடாத்தும் சிறுவர்களுக்கான போட்டி- 2012

தங்களது சிறுவர்களை போட்டிக்கு பதிவு செய்து கொள்வதற்கான இறுதித்திகதி இன்றாகும்

-MJ

Srilanka Islamic Forum (SLIF-UK)  ஏற்பாட்டில் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற இருக்கும் சிறுவர்களுக்கான போட்டிகளுக்கு தங்களது சிறுவர்களைப் பதிவு செய்து கொள்வதற்கான இறுதித் திகதி இன்று  (10-05-2012) ஆகும். எனவே இதுவரைக்கும் தங்களது சிறுவர்களை போட்டிகளுக்கு பதிவு செய்யாதவர்கள் உடனடியாக  http://www.slif.org.uk எனும் இணையத்தளம் ஊடகவோ அல்லது  சகோதரர் ஐமன்  அவர்களை 07807733093 எனும் கைத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாரும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இம்முறை மிகப் பெரிய அளவில் இந்நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி இருப்பதாகவும் East London, West London, Milton Keynes and Leicester ஆகிய 4 பிரதேசங்களிலிருந்தும் இப்போட்டிக்கு அழைப்பு விடப்பட்டிருப்பதாகவும் தெரிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கான கிறாஅத், அதான், பேச்சுப்போட்டி, வினாக்கள் மற்றும் அரபு மொழி அழகிய கையெழுத்துப்போட்டி என இப்போட்டிகள் நடைபெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment