அரசாங்க சுகாதார சேவையில் புதிதாக இரண்டாயிரம் பேரை மருத்துவ மாதுகளாகச் சேர்த்துக்கொள்ளுவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
சுகாதார அமைச்சின் இம்முடிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
அமைச்சரவையின் இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் மருத்துவ மாதுகளைச் சேர்த்துக்கொள்வதற்கு விரைவில் விண்ணப்பம் கோரப்படும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை இத்திட்டத்தின் கீழ் சேர்த்துக்கொள்ளப்படும் 2000 மருத்துவ மாதுகளுக்கும் முதலில் மூன்று வருட பயிற்சி அளிக்கப்படும்.
கிராமிய சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு மருத்துவமாதுகள் பாரிய பங்களிப்பு செய்து வருவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
-thinakaran
Leave a comment