ரணில் நாளை மட்டக்களப்புக்கு விஜயம்

நாளை வெள்ளிக்கிழமை  ஐக்கிய தேசிய கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க,  ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான தயா கமகே உட்பட இன்னும் சிலர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளர் சசிதரன் இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல உறுப்பினர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

Published by

Leave a comment