பாகிஸ்தான் T20 அணித்தலைவராக ஹபீஸ்

-MJ

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் T20 போட்டிகளுக்கு தலைவராக முகம்மட் ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக பாகிஸ்தான் T20 கிரிக்கட் அணிக்கு தலைவராக இருந்துவந்த மிஸ்பாஉல்ஹக் இடை நிறுத்தப்பட்டு இப்பதவி ஹபீஸ் இற்கு வழங்கப்பட்டுள்ளது.

மிஸ்பாஉல் ஹக் தொடர்ந்தம் ஒருநாள், மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு தலைவராக இருப்பார் எனவும்  மேற்படி இரு போட்டிகளுக்கும் உப தலைவராக முகம்மட் ஹபீஸ் செயல்படுவார் எனவும் பாகிஸ்தான் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் இம்மாத இறுதியில் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொள்ள இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment