க.பொ.த. உயர்தரம்: தேசிய பாடசாலைகளிடையே மாணவர்கள் மாறிச்செல்ல தடை

*அமைச்சரவை அங்கீகாரம்

* சுற்றுநிருபம் வெளியாகியது

*வசதி குறைந்த மாணவருக்கே சந்தர்ப்பம்

*மீறினால் அதிபர்கள் மீது நடவடிக்கை

க. பொ. த. உயர்தரம் கற்பதற்காக தேசிய பாடசாலைகளுக்கிடையே மாணவர்கள் இடம்மாறிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கல்வியமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார். க. பொ. த. சாதாரணதரத்தில் சித்தியடைந்த தேசிய பாடசாலை மாணவனொருவன் தான் க.பொ.த. உயர்தரத்தில் பின்பற்றப்பட வேண்டிய துறை, மொழி மூலம் மற் றும் ஏனைய வசதிகள் இருப்பின் எக் காரணம், கொண்டு அவர் இன்னுமொரு தேசிய பாடசாலையில் சேர்த்துக் கொள் ளப்பட இயலாதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உயர்தரம் கற்பதற்காக சகல வசதிகளுட னும் கூடிய தேசிய பாடசாலையொன்றிலி ருந்து இன்னுமொரு தேசிய பாடசாலைக்கு மாணவர்களை பரிமாற்றிக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டுமென என்னால் அமைச்சரவையில் முன்வைக்கப் பட்ட பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள் ளது. இதனையடுத்து, இது தொடர்பாக விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப் பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

தடை விதிகளை மீறி மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் தேசிய பாடசாலை அதிபருக்கெதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது அனைத்து பாடசாலைகளிலும் க. பொ. த. உயர்தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெற்றோரின் அளவுக்கதிகமான ஆர்வம் காரணமாக பிரபலமான பாடசாலைகளிலு ள்ள மாணவர்களை இன்னுமொரு பிரபலமான பாடசாலையில் சேர்த்துக்கொள் வதற்கான பல்வேறு முயற்சிகள் நடை பெற்று வருகின்றன.

இதன் காரணமாக சட்டவிரோதமான குளறுபடிகள் உண்டாக இடமுண்டு. மேலும் வசதிகள் நிறைந்த தேசிய பாடசாலையொன்றிலிருந்து இன்னுமொரு தேசிய பாடசாலைக்கு மாணவர் செல்வதனால் கஷ்ட, அதிகஷ்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் தடைப்படுகின்றன. இது அசாதாரணமான செயல்.

இவற்றை தவிர்க்கும் முகமாகவே புதிய சுற்ற றிக்கையின் பிரகாரம் இந்த நடைமுறை யினை கடுமையாக பின்பற்றவுள்ளோ மெனவும் அமைச்சர் நேற்று கூறினார்.

இதனை அமுல் செய்வதன் மூலம் வசதிகள் குறைந்த பாடசாலையிலுள்ள மாணவர்களுக்கு தேசிய பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பளிக்கப் படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

க. பொ. த. உயர்தரத்தில் மாணவர்கள் பின்பற்றப்படவேண்டிய தமிழ், சிங்களம், அல்லது ஆங்கிலம் ஆகிய ஏதாவதொரு மொழி மூலம், அவர்கள் கற்க விரும்பும் கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், கலை ஆகியவற்றில் ஏதாவதொரு துறை இருக்கக்கூடிய எந்தவொரு தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாண வரும் எந்தக் காரணம் கொண்டும் இன்னுமொரு தேசிய பாடசாலையில் இணைத்துக்கொள்ளப்பட முடியாதெனவும் அமைச்சர் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.

வெளியிடப்பட்டிருப்பது பொதுவான சுற்றறிக்கையென கூறிய அமைச்சர், இந்நடைமுறை மாகாண பாடசாலைகளு க்கு பொருந்துமெனவும் தெரிவித்தார்.

-thinakaran

Published by

Leave a comment