இந்தோனேசியாவில் மாயமான ரஷ்ய விமானம்

(மறைந்த விமானத்தில் பயணித்த தனது உறவினரை நினைத்து அழுகையில்…)

-MJ

நேற்று மாலை 50 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த ரஷ்யாவின் சுப்பர் ஜெட் விமானம் (Sukhoi Superjet 100) இந்தோனேசியாவின் மலைப்பகுதியில் காணாமல் போயுள்ளதாக அறியப்படுகிறது.

இருள் மற்றும் கடும் காற்று காரணமாக வான் மூலமான தேடுதல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் தரைவழியான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தோனேசியாவில் போரா எனும் இடத்தில் விமானமொன்று மலைப்பகுதியொன்றை நோக்கி தாழ்வாக பறந்துகொண்டிருந்ததை அவதானித்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் வெடிப்போசை எதுவும் கேட்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானம் விழுந்து இருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது.

Published by

Leave a comment