-MJ
கிழக்கு மாகாணசபை எதிர்வரும் ஜூன் மாதத்தில் எந்நேரமும் கலைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.
இன்று அலரிமாளிகையில் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது. முதலில் மாவட்ட ரீதியாகவும் பின்னர் மூன்று மாவட்டங்களையும் இணைத்து இக்கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பஸில் ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகபெரும, ஏ.எல்.ஏம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் அமைப்பாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
அரசாங்க சார்பாக தற்போதைய நீதி அமைச்சான ரவூப் ஹகீமை கிழக்குமாகாண முதலமைச்சர் போட்டியில் களமிறக்கப்போவதாகவும் உத்தியோகபூர்வமற்ற செய்திகள் அண்மையில் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment