ஹபரணை-பொலன்னறுவை பாதையில் இன்று இடம்பெற்ற கொடூரமான விபத்து

ஹபரண – பொலன்னறுவை பிரதான வீதியில் 32ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வான் விபத்தில் ஒருவர் பலியானதோடு மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களுள் ஒரு ஆண், 6 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் அடங்குவதுடன் அவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்தப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்று வீதியைவிட்டு விலகி மரமொன்றில் மோதியதில் இவ்விபத்து இன்று 8ம் திகதி அதிகாலை 3.20 அளவில் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் மருதமுனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வான் சாரதியான மொஹமட் ஹசன் மொஹமட் அலி என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் ஹபரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-adaderana

Published by

Leave a comment