கிழக்கு மாகாணத்தில் பிரசித்திபெற்ற பாசிக்குடா கடல் பிரதேசத்தின் உல்லாசத்துறையை அபிவிருத்தி செய்யும் அழகுபடுத்தல் செயற்திட்டம் இவ்வாண்டு டிசெம்பர் மாதம் முடிவிற்குள் பூரணப்படுத்தப்பட வேண்மென அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன முதலீட்டாளர்களைக் கேட்டுள்ளார்.
பாசிக்குடா கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட மாநாடு இன்று செவ்வாய்கிழமை பாசிக்குடா உல்லாச விடுதியில் நடைபெற்றது.
முதலீட்டாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட பல திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்ட போதிலும் சில திட்டங்கள் முடிவுறாத நிலையிலும் இன்னும் சில பணிகள் ஆரம்பிக்கப்படாத நிலையிலும் இருப்பது தொடர்பாக அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
பாசிக்குடா கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டு உல்லாசப் பயணிகளைக் கவரும் வண்ணம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
-tamilmirror
Leave a comment