நோயாளிகளை காப்பாற்றுவதற்காக போலி டாக்டர்களை சட்டபூர்வமாக தண்டிக்க வேண்டும்

இலங்கையில் நோய், நொடியற்ற ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றை அமைக்க வேண்டுமாயின் நல்ல அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழ கங்களில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமன்றி, போதியளவு சுகாதார வசதிகளும், மருந்துகளுக்கான தட்டுப்பாடும் இல்லாதிருப்பது மிகவும் அவசியமாகும்.

இத்தகைய சகல வசதிகளும் சுகாதாரத்துறையில் இருந்தாலும் கூட சில சமூக விரோதிகள் டாக்டர்களின் சோதனைக் குழாய்களை தங்கள் கழு த்தில் தொங்கவிட்டுக் கொண்டு, டாக்டர்களைப் போன்று மக்களை ஏமா ற்றும் சட்டவிரோத செயற்பாட்டை தடுத்துவிடுவது மிகவும் அவசிய மாகும்.

இலகுவில் குணமாக்கக்கூடிய நோயாளிகள் நீண்டகாலம் தாமதித்த பின் னர் போலி டாக்டர்களின் சிகிச்சை பலனளிக்கவில்லை என்று அரசா ங்க ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற போகும் போது, நோயாளியின் நிலைமை மோசமடைவதனால், அவர்கள் மரணிக்கவேண்டிய வேத னைக்குரிய சம்பவங்கள் நாளாந்தம் நடந்து கொண்டிருக்கிறன.

டெங்கு நோயினால் மரணிப்பவர்களில் சுமார் 40 வீதமானோர் முதலில் பணத்தை சுரண்டும் இந்த போலி டாக்டர்களிடம் சென்று ஒருவார காலம் மருந்து எடுத்த பின்னர், காலதாமதமாகி ஆஸ்பத்திரிகளுக்கு சென்றதனால்தான் அவர்கள் மரணத்தை எதிர்நோக்க வேண்டியிருந் தது என்று சிரேஷ்ட வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

டெங்கு நோய் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று அல்லது அனுபவமிக்க ஒரு தனியார் வைத்தியரிடம் சென்று சிகிச்சை எடுப்பது அவசியம். அப்போது அவர்கள் உடனடியாக இரத்தத்தை சோதனை செய்து உடம்பில் டெங்கு நோய் பரவுவதற்கான அறிகுறி இருக்கின் றதா என்பதை அவதானித்து அதற்குரிய சிகிச்சையை அளிப்பார்கள்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் வைத்திய சிகி ச்சை எடுத்தால் அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படுவது இல்லை. சுமார் 10 நாட்களுக்குள் நோய் குணமாக அவர்கள் தங்கள் வீடுகளு க்கு சென்று சில நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டி மாத்திரமே இரு க்குமென்று வைத்தியர்கள் கூறுகின்றார்கள்.

இது போன்று வயிற்றுவலி என்று போலி வைத்தியர்களிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் குடல்வளரி தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிரு ப்பதை தெரிந்துகொள்ள முடியாத இந்த போலி வைத்தியர்கள் வயிற் றுவலிக்குரிய ஏதாவது மத்திரைகளைக் கொடுத்து பணத்தை கறந்து விட்டு, அவர்களை அனுப்பி விடுவதுண்டு. வேதனை தாங்கமுடியா மல் ஓரிரு நாட்களில் குடல்வளரி வீங்கி, அது வெடித்தால் நோயாளி யின் உயிருக்கே ஆபத்து கூட இருப்பதாக வைத்தியர்கள் கூறுகிறா ர்கள்.

இலங்கையில் இதுவரையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வைத் தியர்கள் நீண்ட வெள்ளைக்கோட்டையும், சோதனைக் குழாயையும் கழுத்தில் மாட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரு கிறார்கள் என்று சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இத்தகைய போலி வைத்தியர்களை கண்டுபிடித்து பட்டம் பெறாமல் வைத் தியர்கள் போல் நடித்து, மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் குற்றத் திற்காக அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு சுகாதார அமை ச்சர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதற்காக தற்போதைய சட்டத்தை திருத்தி அமைக்கும் பிரேரணை ஒன்றை அமைச்சர் அமை ச்சரவையின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளார்.

இதனடிப்படையில் நீதிமன்றத்தில் வைத்தியத்துறையில் பட்டம் பெறாமல் வைத்திய தொழில் புரிந்த போலி டாக்டர் ஒருவருக்கு 5 ஆண்டுகால சிறைத்தண்டனை அளிப்பதற்கும் இந்த புதிய சட்டம் வழிவகுக்கும்.

தற்போதுள்ள சட்டம் வலுவற்றிருப்பதனால்தான் இந்த சட்டத்தை திருத்து வதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். தற்போதைய சட்டத்தின் படி ஒருவர் போலி வைத்தியராக இருப்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3000 ரூபா அபராதமே நீதிமன்றத்தில் தண்டனையாக விதிக்கப்படுகிறது. இதனால், பலரும் எவ்வித அச்சமும் இன்றி ஒரு தடவை நீதிமன்றத்தினால் தண்டிக்கப் பட்டாலும் தொடர்ந்தும் போலி வைத்தியர்களாக செயற்பட்டுக் கொண் டிருக்கிறார்கள்.

ஏற்கனவே சுகாதார அமைச்சு இந்த போலி வைத்தியர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு பொலிஸாருக்கும், சட் டமா அதிபர் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் உதவக்கூடிய ஒரு திட்டமொன்றை தயாரித்திருக்கின்றது.

பொதுவாக போலி வைத்தியர் கள் கிராமப்புறங்களிலேயே அதிகமாக இந்த சட்டவிரோத தொழிலை நட த்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதனால் கிராமத்து மக்களை பாதுகாப் பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்ற கருத்தை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த அரசாங்க வைத்திய உத்தியோகத்தர் சங்கத் தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய, வைத்தியத்துறையில் எவ் வித பரீட்சையிலும் தேர்ச்சி பெறாதவர்கள் போலி வைத்தியர்களாக அப் பாவி மக்களுக்கு சிகிச்சையளிப்பதனால், அந்த மனிதருக்கு பேராப த்து ஏற்படுகிறதென்றும், இந்த போலி வைத்தியர்களை தண்டிப்பதற்கு கடுமையான சட்டங்களை நிறைவேற்றுவது அவசியமென்றும் கூறி னார்.

அரசாங்க வைத்திய உத்தியோகத்தர் சங்கத்தின் யாழ்ப்பாண மற்றும் கிழ க்கு மாகாண கிளைகள் நடத்திய ஆய்வொன்றில் இவ்விரு பிரதேசங் களில் 5000இற்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் இருப்பது கண்டுபி டிக்கப்பட்டுள்ளது. போலி டாக்டர்களை கண்டுபிடித்து, தண்டிப்பதற்கு தமது அமைப்பு பொலிஸாருக்கும், சட்டமா அதிபர் திணைக்கள உத்தி யோகத்தர்களுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குமென்று டாக்டர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார்.

-thinakaran

Published by

Leave a comment