உலக சமாதானம் வேண்டி இலங்கையில் ஆசீர்வாத பெருவிழா

* ஆயிரம் பெளத்த பிக்குகள் பங்கேற்பு

* சமாதானம் பற்றிய பெளத்த கோட்பாடுகள் உலக நாடுகளுக்கு அனுப்பிவைப்பு

2600 ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி நிறைவை யொட்டி உலக பெளத்த சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள உலக சமாதானத்திற்கான ஆசிர்வாத பெருவிழா நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

நேற்று 8ம் திகதி முதல் 11ம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள இவ்விழா நிகழ்வுகளில் 30 சர்வதேச நாடுகளின் பெளத்த மதத் தலைவர்கள் 500 பேரும் இலங்கையிலிருந்து ஆயிரம் பெளத்த பிக்குகளும் பங்கேற்கவுள்ளனர்.

நேற்றைய தினம் இதன் ஆரம்ப நிகழ்வு கொழும்பு ‘தாமரைத் தடாகம்’ மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் ஆரம்பமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், புத்த பெருமானுக்கு மலரஞ்சலி செலுத்தி மதத்தலைவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கினார்.

சர்வதேச மதத்தலைவர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு ஆசீர் வழங்கினர். ஜனாதி பதியுடன் அமைச்சர்கள் சி. பி. ரத்நாயக்க, ஜகத் புஷ்பகுமார, பிரதியமைச்சர் ஏ.பீ. எஸ். குணவர்தன உட்பட வெளிநாட்டுத் தூதுவர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சர்வதேச பெளத்த மதத் தலைவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் கண்டி ஸ்ரீ தலதாமாளிகை, அநுராதபுரம் ஜயஸ்ரீ மகாபோதி ஆகிய புனித பிர தேசங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளன்.

1967ம் ஆண்டு இலங்கையில் ஆரம் பிக்கப்பட்ட உலக பெளத்த சங்க சம் மேளனம் தற்போது உலகளாவிய ரீதி யில் 30 நாடுகளில் விரிவடைந்துள்ளது.

நேற்று கொழும்பு தாமரைத்தடாகம் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்வில் தேரவாத, மஹாயான, வஜ்ரயான மற்றும் கொரிய நாட்டுக்கே உரித்தான பெளத்த சமய வழிபாடுகள் நடைபெற்றன.

உலக சமாதானம் தொடர்பான பெளத்த குறிக்கோள்கள் இங்கு சர்வதேச நாடுகளின் பெளத்த மதத் தலைவர்களால் கையொப்பமிடப்பட்டு உலகின் சகல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட வுள்ளன.

நேற்றுப் காலை கொழும்பில் நடை பெற்ற மேற்படி நிகழ்வுகளையடுத்துப் பிற்பகல் உலக பெளத்த மதத் தலைவர் களை வரவேற்கும் நிகழ்வும் விசேட சமய வழிபாடுகளும் களனி பொல்லேகல மானெல் வத்து மகா விஹாரையில் நடைபெற்றன.

மேற்படி நிகழ்வுகளுக்கு சியம், அமர புர, ராமன்ய ஆகிய மூன்று பீடங்களைச் சேர்ந்த மகா நாயக்கர்களின் பூரண ஒத்து ழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

-thinakaran

Published by

Leave a comment