78 தேசிய பாடசாலைளில் அதிபர் ஆசனம் காலி

விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதும் தேசிய பாடசாலைகள் 78 இல் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2011 டிசம்பர் 2ம் திகதி தேசிய பத்திரிகைகளில் வெளியான விளம்பரத்தில் 78 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
கல்வி நிர்வாக சேவையில் முதல் தரத்தில் 7 அதிபர்களுக்கும் 2ம் நிலையில் உள்ள 16 அதிபர்களுக்கும் 3ம் நிலையில் உள்ள 11 அதிபர்களுக்கும் ஏனையவற்றுக்கு இலங்கை அதிபர் சேவை முதல் தர தகுதியுடையோரும் விண்ணப்பிக்க முடியும் என அதில் கூறப்பட்டிருந்தது.

எனினும் விண்ணப்பித்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் நியமனம் வழங்காது 78 தேசிய பாடசாலைகளில் பதில் அதிபர்களை கொண்டு கடமைகள் நிறைவேற்றப்படுகின்றன.

நாட்டின் பிரதான பாடசாலைகள் சில இவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றமை கவலையளிக்கிறது. அரசியல்வாதிகள் பதில் அதிபர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக புதிய நியமனங்களை வழங்காதுள்ளனர்.

இந்த நிலையில் விரைவில் நேர்முகப்பரீட்சை நடாத்தி யாப்பு அடிப்படையில் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

இவ்வாறு அகில இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-adaderana

Published by

Leave a comment