படங்கள் இணைப்பு
-M.T.M. ரஸ்லான்
காத்தான்குடியில் இருந்தும் அதிகமானோர் குடும்ப சகிதம் சென்றுவரவு!
வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற வெசாக் கூடுகள் அலங்கார கண்காட்சியை இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் பார்த்து மகிழ்ந்தனர். மட்டக்களப்பு மங்களாராம விகாரையிலும் அதனைச் சுற்றிலும் வெசாக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யுத்தம் நடைபெற்ற காலங்களில் இரு பிரிவினருக்குமிடையில் சமாதான உடன்படிக்கை செய்து அல்லது குறித்த 3 நாட்கள் யுத்த நிறுத்தம் செய்து இவ்வாறான கொண்டாட்டங்கள் அன்று தொடக்கம் மட்டக்களப்பில் நடைபெற்று வருவது வழக்கமானது. பொலிசாரினரதும் இராணுவத்தினரதும் ஏற்பாட்டில் இந்நிகழ்வுகள் வருடம் தோரும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவது வழக்கமாகும்.
இன, மத வேறுபாடின்றி மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்களும், ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி, கல்முனை போன்ற இடங்களில் இருந்து பெரும்பாளான முஸ்லிம்களும், தென்னிலங்கையில் இருந்து அதிகமான சிங்கள மக்களும் ‘வெசக்கூடு’ கண்காட்சியை பார்த்து மகிழ்ந்தனர். கடந்த 3 நாட்களிலும் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் இக்கொண்டாட்டத்தை பார்தத்துச் சென்றனர் என இவ் ஏற்பாட்டு அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அன்னதானங்களும் குளிர்பானங்களும் வழங்கி மக்களை மகிழ்ச்சிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.




Leave a comment