ஆசிரியர்களின் பதவி உயர்வை அதிகாரிகள் தாமதித்து வருவதாக கல்வி தொழிலாளர்களின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஒன்றரை வருடங்களுக்கு மேலாகா ஆசிரியர்கள் பதவி உயர்த்தப்படவில்லை என அந்த சங்கத்தின் செயலாளர் வசந்த தர்மசிறி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் கல்வியில் அபிவிருத்தியை எதிர்பார்ப்பதாகவும் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தற்புகழ்பாடும் அரசு ஆசிரியர்கள் தொடர்பில் முறையாக செயற்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2010-12-31 அன்றே இறுதியாக ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும் இன்னும் 15000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் அரச சேவை ஆணைக்குழு என்பன உடன் கவனம் செலுத்த வேண்டும் என வசந்த தர்மசிறி கோரிக்கை விடுத்துள்ளார்.
-adaderana
Leave a comment