‘தஹ அட பங்குவ’ (දහ අට වංගුව) என அழைக்கப்படும் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட கண்டி – மஹியங்கனை 18வது வளைவு மக்கள் பாவனைக்காக இன்று (06-05-2012) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் திறந்து வைக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 41 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாதை 5000 மில்லியன் ரூபா செலவில் மூன்று ஆண்டுகளாக விரிவுபடுத்தப்பட்டு வந்து.
நீண்ட கனரக வாகணங்களும், பயணிகள் பஸ் வண்டிகளும் தினமும் பாரிய சிரமங்களையும், காத்திருக்கும் நேரங்களையும் தாங்கிவந்த இப்பாதையானது, இனிமேல் இவ்வாறான சிரமங்களைத் தவிர்த்து தினமும் இப்பாதையூடாகப் பயணிக்கும் மக்கள் பெரிதும் நன்மையடைவதுடன் ஏனைய பயணிகளுக்கும் இலகுவான போக்குவரத்தை வழங்க வழிவகுக்கும் எனவும் எதிர்பாரக்கப்படுகிறது.
![Ramboda_01[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/ramboda_011.jpg?w=300&h=233)
Leave a comment