அம்பாரை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட சாளம்பைக்கேணி கிராமத்தில் இயங்கி வந்த அன்வர் இஸ்மாயில் பொது நூல் நிலையம் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதன் காரணமாக அப்பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் தமது கல்வித் தேவையையும், பொது மக்கள் தினசரி பத்திரிகைகள் வாசித்தல் போன்ற தேவையையும் நிறைவு செய்ய முடியாதுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மிகவும் வறிய நிலையிலுள்ள விவசாயிகள் வாழும் கிராமத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் இப்பொது நூல் நிலையத்தின் மூலம் கடந்த காலங்களில் பல்வேறு நன்மைகளையடைந்தனர்.
இது மூடப்பட்டதன் காரணமாக தற்போது தமது கல்வி நடவடிக்கைகளுக்காக 10 கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியேற்பட்டுள்ளது.
தற்போது அன்வர் இஸ்மாயில் பொது நூல் நிலையம் மாடுகளின் மேய்ச்சல் தளமாகவும், படுத்துறங்கும் இடமாகவும் மாறியுள்ளது.
இப்பிரதேச வறிய மாணவர்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட பொது நூல் நிலையத்தை நாவிதன்வெளி பிரதேச தவிசாளர் மற்றும் அதிகாரிகள் இயங்கச் செய்து மாணவர்களின் கல்விக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-adaderana
Leave a comment