இறக்குமதி செய்யப்படும் சகல குழந்தைகள் பால் மாக்களுக்கும் கட்டுப்பாட்டு விலை முறையை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 8ம் திகதி முதல் இக்கட்டுப்பாட்டு விலை முறை அமுலுக்குவரும் என்று கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று தெரி வித்தார்.
இறக்குமதி செய்யப்படும் குழந்தைகள் பால் மாக்க ளின் விலைகள் சந்தையில் வெவ்வேறு விதமாகக் காண ப்படுகின்றன. இது மக்களுக்கு சுமையாகவும் விளங்கு கின்றது.
ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய நடத்தப் பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்திருக்கின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் தான் இறக்குமதி செய்யப்படும் சகல குழந்தை பால் மாக்களுக்கும் எதிர்வரும் 8ம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலை நடைமுறைப் படுத்தப்பட விருக்கின்றது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
-Thinakaran
Leave a comment